tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பேரவை

இந்திய ஜனநாயக வாலிபர்  சங்க பேரவை 

நாகப்பட்டினம், ஜூலை 28-  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேதாரண்யம் தெற்கு ஒன்றியப் பேரவை ஜூலை 27 அன்று காலை 10 மணிக்கு வேதாரண்யம் தியாகி இரணியன் நினைவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் அருள்தாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், 9 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக சி.பாலசுந்தரம், செயலாளராக கே.டி. பாரதி (எ) குலவாணன், பொருளாளராக பி. திலிபன், துணைத் தலைவராக எம். சிவானந்தம், துணைச் செயலாளராக எஸ். அன்பானந்தம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.