ஜூலை 30ஆம் தேதி விண்கல் ஒன்று பூமியை மிக நெருக்கத்தில் கடந்து செல்லவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
2025 OL1 என்ற விண்கல் மணிக்கு 16,904 மீட்டர் வேகத்தில் பயணித்து பூமியை நெருங்கிக் கொண்டுள்ளது, சிறிய விமானம் அளவிலான 110 அடி விட்டத்தில் இந்த விண்கல்லானது ஜூலை 30ஆம் தேதி பூமியை மிக நெருக்கத்தில் கடந்து செல்லவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இது பூமியிலிருந்து 1.29 மில்லியன் கி.மீ தூரத்தில் உள்ளது.
மேலும் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை என்றும் நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்கல்லைக் கண்காணித்து வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.