ஓலியம் நச்சு வாயு கசிவு : காலியானது போய்சர் நகரம்
மும்பை மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ளது போய்சர் நகரம். நாட்டில் உள்ள மிகப் பெரிய தொழில்துறை நகரங்களில் போய்சரும் ஒன்று. இந்நிலையில், திங்களன்று மாலை போய்சரில் உள்ள எம்ஐடிசி பகுதியில் ‘பகேரியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ நிறுவனத்தில் 2,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஓலியம் (புகையும் சல்பூரிக் அமிலம் - வேதியியல் ரீதியாக சக்தி வாய்ந்த திரவம்) தொட்டியில் திடீரென கசிவு ஏற்பட்டது. இதனால் நகரில் அடர்த்தியான வெள்ளை புகை மூட்டம் உருவானது. பலத்த காற்று வீசியதால், நச்சுப் புகை சுமார் 5 கி.மீ., சுற்றளவிற்குப் பரவியது. ஒரு சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக, தாராப்பூர் வித்யாமந்திர் பள்ளியைச் சேர்ந்த 1,600 மாணவர்கள், தொழிற்சாலை மற்றும் அருகில் உள்ள ஆலைகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பாது காப்பான இடங்களுக்கு மாற்றப் பட்டனர். இதனால் போய்சர் நகரம் மூன்றில் ஒரு பகுதி மக்கள் நடமாட்ட மின்றி காலியானது. இதுதொடர்பாக பால்கர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் இந்து ராணி கூறுகை யில்,“வாயுக் கசிவு குறித்த தகவல் கிடைத்தவுடன் பேரிடர் மேலாண்மைத் திட்டம் உடனடியாக மீட்புப் பணியில் ஈடு பட்டது. மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படை, பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 3 பேருக்கு லேசான கண் எரிச்சல் ஏற் பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றபடி பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. வத ந்திகளை நம்ப வேண்டாம். எனினும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
