states

img

ஸ்கேன் இந்தியா

சீரழிப்பு

செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை இந்தியா பெரும் விளம்பரத்து டன் நடத்தியது. ஒட்டுமொத்த பணிகள் மீது கறை படியும் வகையில் கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் நடந்து கொண்டது. விலைக்கு வாங்கிய ரோபோவைத் தங்கள் சொந்த உரு வாக்கம் என்று சொல்லி சந்தி சிரிக்க வைத்தது. இத்தனைக்கும் பிறகு பல்கலைக்கழக மானி யக்குழுவோ அல்லது கல்வி அமைச்சகமோ என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றால் ஒன்றுமே இல்லை. இதற்கு முன்பு பல முறை பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு விளக்கம் கேட்டுக் கூட கடிதம் எழுத வில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக கல்வி யாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பெயரைச் சீரழிக்கும் வகையில் சர்வதேச மாநாட்டில் நடந்து கொண்டதற்கு, அதன் அங்கீகாரத்தைக் கூட ரத்து செய்யலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பல்லிளிப்பு

திரிபுராவில் உள்ளாட்சி அமைப்புகளில் பெரும் ஊழல் முறைகேடுகள் நடந்து வருவது அம்பலமாகியுள்ளது. சரிலம் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் போட்ட பல சாலைகள் ஒரே நாளில் மேற்பரப்பு உரிந்து வந்தது போல தகர்ந்து கிடந்தது. படுமோசமாக வேலை நடந்திருப்பதாகச் சொல்லி, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில் மட்டுமல்லாமல், மாநிலத்தின் பல பகுதிகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக பொறுப்பில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தான் நிதி ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு ஒதுக் கப்படும் இடங்களில் பாஜகவினருக்கே ஒப்பந்தப் பணிகள் தரப்படுகின்றன. இந்த சாலைகள் பல்லிளித்துக் கிடப்பதற்கும் அதுதான் காரண மாக இருக்கிறது.

முகம் சுளிப்பு

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலுக்காகக் கொண்டு வரப் பட்ட மகளிர் உரிமைத்தொகை நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது. 60 லட்சம் பேர் தகுதியற்றவர்கள் என்று நீக்கப்பட்டுள்ளனர். மேலும் நீக்கம் இருக்கும் என்கிறார்கள். ஓட்டுக்காகக் கொடுக்கப்பட்ட பணம் என்ற தங்கள் குற்றச்சாட்டு உண்மைதானே என்று  எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. 600 ரூபாய் உயர்வு இருக்கும் என்றார்கள்.  அதுவும் இல்லை. ஆதார்  அட்டையை வைத்து எப்படி எங்களை நீக்கலாம் என்று பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகிறார் கள். பாஜக அரசின் இந்த ஜனநாயக விரோத செயல்பாடுகளைப் பார்த்து அக்கட்சியின் ஆதரவாளர்களே முகம் சுளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முகமூடி கிழிப்பு

மத்தியப் பிரதேசம், இந்தூரில் கழிவு நீர் கலந்த தால் உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரத்தில் நீதி மன்றத்தில் சொன்ன பாஜக அரசின் பொய் முக மூடி கிழிந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக் கை 16 என்று நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்றக் கூட்டத் தொட ரில் கழிவு நீர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டபோது அரசு பிடிவா தம் பிடித்து மறுத்தது. ஆனால், தொடர்ந்து வலி யுறுத்தியதால் விவாதத்திற்கு ஒப்புக் கொண்டார் கள். 35 பேர் உயிரிழந்தார்கள். நீங்கள் 16 பேர்தான்  என்று எப்படிச் சொன்னீர்கள் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர், 35 எல்லாம் இல்லை. 22 பேர் உயிரிழந்த னர் என்று புதிதாக ஒரு எண்ணிக்கையைக் கூறினார். எப்படியாகினும் நீதிமன்றத்தில் சொன்னது பொய்தானே என்ற கேள்வி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.