சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா
பீகாரில் என்டிஏ பெற்றது வெறும் பெரும்பான்மை பற்றியது அல்ல. கிட்டத்தட்ட 80% வாக்குகளைப் பெற்றுள்ளது எப்படி? தேர்தல் முடிவு மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக பீகார் மக்கள் அதிருப்தியில் உள்ள சூழலில் தனிப்பெரும்பான்மையுடன் என்டிஏ வெற்றி பெற்றுள்ளது மர்மமாகவே உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் ராய்
தில்லி குண்டுவெடிப்பு காரணமாக பீகார் தேர்தல் வெற்றியை கொண்டாட வேண்டாம் என பாஜக தலைமை கூறியது. ஆனால் முதலில் கொண்டாடியவர் பிரதமர் மோடி தான். அவர் பெரிய விழாவாக கொண்டாடினார். உ.பி.,யில் கல்குவாரி வெடித்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் உள்ளிட்ட பாஜகவினர் இன்னும் கொண்டாட்டத்தில் தான் உள்ளனர்.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.சிங்
பாஜகவில் குற்றவாளிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் உள்ளவர்களை எதிர்த்து நான் பேசினேன். அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது என கோரிக்கை விடுத்தேன். இது எப்படி கட்சியை எதிர்க்கும் கருத்தாகும்? நான் எனது ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் நட்டாவிடம் கொடுத்துவிட்டேன்.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
ஒரு குறிப்பிட்ட காவல்நிலையத்தில் கிலோ கணக்கில் வெடிபொருட்களை வைத்திருப்பது முற்றிலும் பொறுப்பற்ற செயல். காஷ்மீரில் காவல்நிலைய வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது ஒரு விபத்து என்று எப்படி உறுதி செய்கிறோம்? இதைப் பற்றி யாரும் விவாதிக்கவும் செய்யவில்லை ஏன்?
