அசாம்: வெறுப்பு அரசியலே ஆட்சியாக மாறிய அவலம்
அசாம் மாநிலம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தற்போதைய ஆட்சியின் நிர்வாகமானது கொள்கை அல்லது செயல்பாடுக ளால் வரையறுக்கப்படாமல், திட்டமிட்ட வெறுப்பு ணர்வு மற்றும் வகுப்புவாதப் பிரிவினையாலேயே கட்டமைக்கப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வா தாரம், வளர்ச்சி மற்றும் ஆட்சியாளர்களின் பொறுப்புக் கூறல் குறித்த ஜனநாயகப் போட்டியாக இருக்க வேண்டிய தேர்தல், தற்போது அச்சுறுத்தல் மற்றும் திட்டமிட்ட வெறியூட்டலுடன் கூடிய அணி திரட்டல் பிரச் சாரமாக மாற்றப்பட்டு வருகிறது. அசாம் முதலமைச்ச ரின் செயல்பாடுகள் ஒரு ஜனநாயகத் தலைவரைப் போலன்றி, மிகவும் ஆபத்தான ஒரு போக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.
இது அச்சுறுத்தல், கொடூரம், மனிதநேயமற்ற தன்மை மற்றும் எவ்வகை யிலாவது அதிகாரத்தைத் தக்கவைத்தல் என்ற அரசி யலாகும். கடந்த பிப்ரவரி 7 அன்று அசாம் ஆளும் பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு, பின்னர் நீக்கப்பட்ட அந்த வீடியோ ஒரு விபத்தல்ல. அதில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இரு முஸ்லிம் நபர்களை நோக்கி அடையா ளப்பூர்வமாக துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சி கள் இடம்பெற்றிருந்தன. ஒரு சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒழிக்கப்பட வேண்டிய இலக்குகளாக அந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டிருந்தனர். வன் முறையையே ஒரு ‘அறமாக’ காட்டிய அந்தப் பதிவு, வகுப்புவாத வெறுப்பை தேர்தல் பிரச்சாரமாக மாற்றியது. இது வெறும் உருவகமல்ல, மாறாக வெறு ப்பு அரசியல் திட்டத்தின் பெயரால் தூண்டப்பட்ட வெளிப்படையான வன்முறை உணர்வாகும்.
முதலமைச்சரின் துப்பாக்கிச் சூடு வீடியோ
அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவிப்பிரமாணம் எடுத்த ஒருவர், ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த குடிமக்களைச் சுடுவது போன்ற காட்சியுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்வது என்பது பொறுப்பற்றத் தனம் மட்டுமல்ல, அது மனிதநேயமற்ற மற்றும் அரசிய லமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான செயலாகும். அனைத்துக் குடிமக்களையும் பாகுபாடின்றிப் பாது காக்க வேண்டும் என்பதே பதவிப்பிரமாணத்தின் அடிப் படை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது; 21-ஆவது பிரிவு வாழ்வுரிமையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது. மக்கள் தொகையின் ஒரு பிரிவின ருக்கு எதிராக வன்முறை ஒத்திகை பார்ப்பது என்பது, இந்தச் சட்ட உத்தரவாதங்களை எள்ளி நகையாடுவ தோடு, பொது வாழ்வில் பகைமையை சட்டப்பூர்வ மாக்கும் ஆபத்தையும் கொண்டது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப் பட்டது.
ஆனால், நீக்கப்பட்டதால் அந்த உள்நோக்கம் மறைந்துவிடாது. பெரும்பான்மை ஆதரவைத் திரட்டு வதற்காக இனப்படுகொலை பிம்பங்களைக் கூடப் பயன்படுத்தத் துணியும் ஒரு அபாயகரமான அரசியல் மனநிலையை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியது. இது உலகெங்கிலும் உள்ள நவீன தாராளவாத பாசிச சர்வாதிகாரிகளின் பாணியை ஒத்திருக்கிறது: எதிரி களை உருவாக்குதல், உணர்ச்சிகளைத் தூண்டுதல், சிறுபான்மையினரை அச்சுறுத்துதல் மற்றும் அச்சத்தை வாக்குகளாக மாற்றுதல். இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வப் பொறுப்புக்கூறல் இதுவரை எட்டப்படவில்லை. முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாவுக்கு எதிராக எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இருப்பினும், இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த நிலையில் மனுவை விசாரிக்க மறுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மனுதாரர்களை கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. பிப்ரவரி 7 அன்று பாஜகவின் அதி காரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்ட இந்தப் பதிவு, திட்டமிடப்பட்ட வெறுப்பு அரசியலின் மிக மோச மான வெளிப்பாடு என்று மனுதாரர்கள் வாதிட்டனர். இந்த விவகாரம் தற்போது மேலதிக சட்ட நடவ டிக்கைகளுக்காகக் காத்திருக்கிறது.
வெறித்தனமான முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரம்
இந்த வெறுப்பு அரசியல் திடீரெனத் தோன்றிய தல்ல. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ் கோகோய் மீது “பாகிஸ்தான் தொடர்பு” இருப்பதாக பாஜக அரசின் முதலமைச்சர் முன்வைத்த திட்டமிட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது. தேசிய பாதுகாப்பு தொடர்பான இத்தகைய குற்றச் சாட்டுகள் ஒன்றிய உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் வரம்பிற்கு உட்பட்டவை. ஆனால், ஒன்றிய அரசிடமிருந்து இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது நடவடிக்கையோ வரவில்லை. இருப்பினும், முதலமைச்சர் தானே முதன்மைக் குற்றச்சாட்டாளராக மாறி, பெரும் ஆதாரங்களை வெளியிடப் போவதாகக் கூறி ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட்டினார். ஆனால், எந்த வொரு சரிபார்க்கத்தக்க ஆதாரத்தையும் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை. ஒரு மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு வரம்புகளை மீறிய இந்தச் செயல், இறுதியில் ஒரு அரசியல் தோல்வி மற்றும் ‘பிளாப் ஷோ’ (flop show) ஆகவே முடிந்தது.
கார்ப்பரேட்டுகளுக்கான நிலங்கள்
தனிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், ஒரு பரந்த கொள்கை ரீதியான மற்றும் கட்டமைப்பு ரீதியான சிக்கல் உள்ளது. அசாமில் வெளியேற்றம் அல்லது பிற வழிகளில் மீட்கப்பட்ட சுமார் 40,000 பிகா நிலங் கள் அதானி, அம்பானி, ராம்தேவ் ஆகியோரு டன் தொடர்புடைய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களு க்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவை வளர்ச்சி மற்றும் முதலீட்டின் பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றன. ஆனால், மண் அரிப்பால் பாதிக்கப்பட்ட சமூகங்கள், சிறு விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நிலப் பாது காப்பிற்காகப் போராடி வரும் வேளையில், பொது வளங்களை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பது என்பது ஒரு ‘கார்ப்பரேட்-முதல்’ (corporate-first) கொள்கையையே காட்டுகிறது. மேலடுக்கில் கார்ப்ப ரேட் ஒருங்கிணைப்பு, அரசியல் களத்தில் வகுப்புவாத அணி திரட்டல் மற்றும் அடிமட்டத்தில் பொருளாதா ரத் துயரம் என்பதே அசாமின் இன்றைய நிலை. இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட் டம் அதிகமாக உள்ளது. விலைவாசி உயர்வு உழைக்கும் குடும்பங்களை வாட்டுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் மற்றும் மண் அரிப்பால் ஆயி ரக்கணக்கானோர் இடம் பெயர்கின்றனர். நிர்வாகத் தோல்விகள் மற்றும் பொருளாதார கஷ்டங்கள் மீதான மக்களின் அதிருப்தி அதிகரித்து வருவதால், முதல மைச்சரின் பேச்சுகள் மேலும் ஆக்ரோஷமாகவும் மோதுவதைப் போலவும் மாறி வருகின்றன. வகுப்பு வாதஅணி திரட்டல் என்பது அவர்களது பலத்தினால் செய்யப்படவில்லை, மாறாக அரசியல் நடுக்கத்தி னால் (political anxiety) கையாளப்படும் ஒரு தந்திர மாகவே தெரிகிறது.
தேர்தல் பட்டியல் முறைகேடுகள்
அசாம் தேர்தல் களத்தில் நடத்தப்படும் மற்றொரு சூழ்ச்சி வாக்காளர் பட்டியல் திருத்தம். சமீபத்திய சிறப்புத் திருத்தத்தின் போது, பல தொகுதிகளில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட முறையில் சில பிரிவினரின் வாக்குரிமை யைப் பறிக்கும் செயல் என்று சிவில் சமூக அமைப்பு கள் குற்றம் சாட்டுகின்றன. வகுப்புவாத அணிதிரட்டல் ஒரு கருவி என்றால், வாக்காளர் பட்டியல் முறைகேடு மற்றொரு கருவியாகும்.
“எந்த வகையிலாவது வெற்றி பெறுவது” என்பது ஒரு அரசியலமைப்பு ஜனநாய கத்தின் நெறியாக இருக்க முடியாது. வெறுப்பு பிம்பங்கள், ஆதாரமற்ற ‘தேசிய பாது காப்பு’ நாடகங்கள், தீர்க்கப்படாத ஊழல் குற்றச் சாட்டுகள், கார்ப்பரேட் நில ஒதுக்கீடுகள் மற்றும் சர்ச் சைக்குரிய வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் என அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் ஒரு தெளி வான சித்திரம் கிடைக்கிறது. அது அதிகாரம் மையப் படுத்தப்பட்ட, மாற்றுக் கருத்துக்கள் ஒடுக்கப்பட்ட, சிறு பான்மையினர் குறிவைக்கப்பட்ட ஒரு நவதாராளவாத பாசிசப் போக்கு (neo-fascist drift) ஆகும்.
தேர்தலில் ஒற்றுமையின் தேவை
அசாம் ஒரு தீர்க்கமான தருணத்தில் நிற்கிறது. வர விருக்கும் தேர்தல் என்பது கட்சிகளுக்கு இடையிலான போட்டி மட்டுமல்ல. அது இரண்டு அரசியல் பார்வை களுக்கு இடையிலான போராட்டம்: ஒன்று அரசியல மைப்பு கோட்பாடுகள், பன்முகத்தன்மை மற்றும் சமூக நீதியில் வேரூன்றியது; மற்றொன்று மதரீதியான அணி திரட்டல், அதிகாரக் குவிப்பு மற்றும் கார்ப்பரேட் ஆதரவால் இயக்கப்படுவது. வெறுப்பு அரசியல் பெரும்பாலும் பலமாகத் தோற்ற மளிக்கும். ஆனால் உண்மையில் அது பாதுகாப்பற்ற தன்மையின் வெளிப்பாடாகும்.
அதிகரித்து வரும் மக்கள் அதிருப்தியை உணர்ந்து, பொறுப்புக்கூறலுக்குப் பதி லாகப் பிரிவினையைத் தேர்ந்தெடுக்கும் தலை மைத்துவத்தின் எதிர்வினை அது. எனவே, சிதறிக் கிடக்கும் எதிர்ப்பு பலன் தராது. ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும். அசாமின் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பது தனிமைப்படுத்தப்பட்ட குரல்களால் முடியாது. ஒரு விரிவான, கொள்கை ரீதி யான எதிர்க்கட்சி ஒற்றுமை மட்டுமே பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குச் சவால் விடுத்து, ஜனநாயக ஆட்சியில் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி, பிப்ரவரி 22, 2026 தமிழில் சுருக்கம் : ராகினி
