ஆற்றில் மிதந்த ஆதார் அட்டைகள்
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள பாரங்கிப்பேட்டை யில் உள்ள நேத்ராவதி ஆற்றங் கரையில் மார்ச் 3 அன்று ஏராளமான ஆதார் கார்டுகள் கிடந்தன. இதனைக் கண்ட கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் உள்ளூர் மக்கள் ஆதார் அட்டைகளை சேகரித்து, உடனடியாக கர்நாடக சபாநாயகர் யு.டி.காதரிடம் ஒப்ப டைத்தனர். மங்களூரு தொகுதி எம்எல்ஏ-வான யு.டி.காதர் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறையான தபால் அல்லது விநியோக நடைமுறைகளைப் பின்பற்றாமல் பொதுமக்களின் முக்கிய ஆவணங்கள் இவ்வாறு ஆற்றில் வீசப் பட்டது குறித்து விசாரணை நடத்தி உண் மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணை யத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அசாமில் ஆள்பிடி வேலையை துவங்கிய பாஜக
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் தோல்வி பயத்தில் உள்ள பாஜக, வழக்கம் போல ஆள்பிடி வேலையை துவங்கியுள்ளது. கடந்த வாரம் எதிர்க்கட்சியான காங்கிர ஸிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 3 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். பாஜகவுடனான தொடர்பு காரணமாக காங்கிரஸிலிருந்து இடைநீக்கம் செய்யப் பட்ட கமலாக்யா புர்கயஸ்தா, வசந்தா தாஸ் மற்றும் சசி காந்தா தாஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் வியாழனன்று கவுகாத்தி யில் உள்ள பாஜகவில் இணைந்தனர். முன்னதாக, கடந்த மாதம் அசாம் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் பூபென் குமார் போரா பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.