ஒருநாள் நிகழ்ச்சிக்கு ரூ.33 கோடியை சூறையாடிய மோடி
பெங்களூரு 2023ஆம் ஆண்டு நடைபெற்ற கர் நாடக சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்பு, பிப்ர வரி 27 அன்று ஷிவமோகா மற்றும் பெலகாவி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பிரத மர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்வுகளுக்கு செய்யப்பட்ட செல வுகள் தொடர்பாக பதிலளிக்கக் கோரி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் சமூக ஆர்வலர் மஞ்சுநாத் ஹிரேச்சவுதி கேள்வி எழுப்பி இருந்தார். 3 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அதில்,”பிப்ரவரி 27 அன்று ஷிவ மோகா விமான நிலையத்தை பிரத மர் மோடி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா மற்றும் பொ துக்கூட்டத்திற்காக மட்டும் ரூ.18.81 கோடி செலவிடப்பட்டுள்ளது. அன்று மதியமே பெலகாவிக்குச் சென்று அவர் நடத்திய சாலைப் பேரணிக்கு (ரோடு ஷோ) ரூ.14.35 கோடி செலவானது. இரு நிகழ்வுகளுக்கும் மக்களை அழை த்து வருவதற்காக 1,800 பேருந்து கள் வாடகைக்கு எடுக்கப்பட்டதில் ரூ.4.11 கோடி செலவிடப்பட்டது. ஜெர்மன் தொழில்நுட்பத்திலான நீர்ப்புகா பந்தல், பூ அலங்கா ரம் மற்றும் பசுமை அறைகளுக் காக ரூ.1.8 கோடி என மொத்தம் ரூ. 33.16 கோடி செலவு செய்யப் பட்டுள்ளது. அப்போதைய கர்நாடக பாஜக அரசின் பொதுப் பணித்துறை இந்தச் செலவுகளு க்கு டெண்டர் முறையைப் பின் பற்றாமல், பொதுக் கொள்முதல் சட்டத்தின் பிரிவு 4(ஜி)-ஐப் பயன் படுத்தி விலக்கு அளித்துள்ளது” என ஆர்டிஐ பதிலில் கூறப்பட்டுள் ளது. முன்னதாக, 2022ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற ஒருநாள் யோகா தின நிகழ்ச்சிக்காக அப்போதைய கர்நாடக பாஜக அரசு ரூ.56 கோடி வரை செலவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
