india

img

பணி நீக்க அறிவிப்பு - டிசிஎஸ்க்கு எதிராக ஐ.டி ஊழியர்கள் சங்கம் புகார்!

டிசிஎஸ்-இன் பணி நீக்க நடவடிக்கைக்கு எதிராக ஐ.டி ஊழியர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது.
கடந்த 27ஆம் தேதி 12000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப்போவதாக் டிசிஎஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் டிசிஎஸ்-இன் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிராகத் தொழிலாளர் அமைச்சகத்திடம் ஐ.டி ஊழியர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
நேற்று அளிக்கப்பட்ட புகாரில் பணிநீக்கம் குறித்து டி.சி.எஸ் நிறுவனத்திடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் எனவும் கட்டாய வெளியேற்றங்கள் மற்றும் தாமதமான ஆட்சேர்ப்பு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் 10-20 ஆண்டுகள் டிசிஎஸ்-இல் பணிபுரியும் நடுத்தர மற்றும் மூத்த நிலை நிபுணர்கள் பெருபான்மையாக பாதிக்கப்படவுள்ளனர். முறையாக எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஞாயிறன்று மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது மேலும் அரசாங்கத்துக்கு முன்பாக எந்தத் தகவலையும் அளிக்காமல், ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய TCS திட்டமிட்டுள்ளது. என NITES தலைவர் ஹர்ப்ரீத் சிங் சலுஜா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.