headlines

img

தேசிய நலனா? சித்தாந்தக் கூட்டா?

தேசிய நலனா? சித்தாந்தக் கூட்டா?

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ‘அணிசேராக் கொள்கை’, ‘மனிதாபிமான ஆதரவு’ ஆகிய தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டது. குறிப்பாக, பாலஸ்தீன விவகாரத்தில், அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒரு இனத்தின் பக்கம் நிற்பதை இந்தியா தனது தார்மீகக் கடமையாகக் கருதியது. ஆனால் இன்று நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, இஸ்ரேலுடன் கொண்டுள்ள நெருக்கம், இந்தியாவின் பாரம்ப ரியப் பெருமையையும் பிராந்தியப் பாதுகாப்பை யும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

காந்தி, நேரு காலத்திலிருந்தே இந்தியா பாலஸ்தீனத்தின் இறையாண்மையை ஆத ரித்தது. 1988-இல் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக  அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடு இந்தியா. ஆனால் மோடி பிரதமரான பின்பு கடந்த பத்தாண்டுகளில் இந்த நிலைப்பாடு மாறியுள்ளது. ஐநா சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களில் இந்தியா தொடர்ந்து ‘வாக்கெடுப்பிலிருந்து விலகி நிற்பது’ பாலஸ் தீனத்திற்குச் செய்யும் மறைமுகத் துரோகமும், இந்தியாவின் சர்வதேச நற்பெயருக்குக் களங்கமாகும்.

இந்த மாற்றத்திற்குப் பின்னால் ஒரு சித்தாந்த ஒற்றுமை உள்ளது. ஆர்.எஸ்.எஸ்-இன் ‘இந்துத் துவா’ கொள்கையும், இஸ்ரேலின் ‘தீவிர சியோ னிசமும்’ ஒரே மாதிரியான மதவாதத் தன்மைக் கொண்டவை. சிறுபான்மையினரை அந்நி யப்படுத்துவதும், ‘இரத்த உறவு’ மற்றும் ‘புனித பூமி’ என்ற அடிப்படையில் தேசியவாதத்தைக் கட்டமைப்பதும் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதி ரானவை. இஸ்ரேலிய மாதிரியைப் பின்பற்றி இஸ்லாமிய வெறுப்பு அரசியல் முன்னெடுக் கப்படுவது, இந்தியாவின் பன்முகத்தன்மை யைச் சிதைக்கும் பேராபத்தாகும்.

அதானி குழுமம் இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தைக் கைப்பற்றியதும், இஸ்ரேலிய நிறுவனங்களுடன் இணைந்து ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதும் தற்செயலானது அல்ல. நாட்டின் வெளியுறவுக் கொள்கை ஒரு தொழில திபர் குழுமத்தின் லாபத்திற்காக மாற்றிய மைக்கப்படும் சூழ்ச்சி ஆகும்.

ரஷ்யா இந்தியாவின் கடினமான காலங்க ளில் உண்மையான நண்பனாக இருந்துள்ளது. ஈரான் கலாச்சார மற்றும் வியூகக் கூட்டாளி. இந்த இரு நாடுகளையும் விடுத்து இஸ்ரேலை யும் அமெரிக்காவையும் நம்புவது, இந்தியாவின் ‘அணிசேராக் கொள்கை’ மற்றும் ‘தேசியப் பாது காப்பு’ இரண்டிற்கும் சவக்குழி தோண்டுவ தாகும்.

இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் இந்தியத் தலைவர்கள் கண்காணிக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்டவை, இந்திய அரசை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதோ என்ற சந்தேகத்தை வலுப் படுத்துகின்றன. மதவாத அரசியலும் கார்ப்பரேட் லாபமும் முன்னிறுத்தி எடுக்கப்படும் இந்த வெளி யுறவுக் கொள்கை, வருங்காலத் தலைமுறை க்கு பாதுகாப்பற்ற சூழலை விட்டுச் செல்லும்.