அன்னதாதாக்களுக்கு அநீதி!
விவசாயிகளின் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இல்லை என்று நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் திங்கள்கிழமை கூறியுள்ளார். இந்தாண்டு மட்டுமல்ல, கடந்தாண்டும் ராஜஸ்தான் எம்.பி., ஹனுமன் பெனிவால் எழுப்பிய வினாவுக்கும் அவ்வாறே பதில் கூறியிருக்கிறார்.
பாஜக அரசைப் பொறுத்தவரை நேற்றொரு பேச்சு, இன்றொரு பேச்சு என்பதே இல்லை. அவர்களது வாய், விவசாயிகளை அன்னதாதா என்று புகழ்ந்துரைக்கும். ஆனால் அவர்களது உள்ளமோ விவசாயிகளுக்கு விரோதமாகவே சிந்திக்கும். மோடி தலைமையில் ஆட்சி அமைந்ததிலிருந்து விவசாயிகளுக்கு எதி ரான மூன்று சட்டங்களையும் மின்சாரத் திருத்த மசோதாவையும் கொண்டு வந்தது.
அதை எதிர்த்து ஏர்முனை பலராமர்கள் ஓராண்டுக்கு மேலாக நடத்திய முற்றுகைப் போர் முனை அழுத்தத்தால் அந்தச் சட்டங்களை முற்றாகக் கைவிடுவதாகக் கூறி மன்னிப்பும் கேட்டார் மோடி. விவசாய விளைபொருள்க ளுக்கு கட்டுபடியான விலைக்கு சட்டம் கொண்டு வருவதும் ஒருமுறை முழுமையான கடன் தள்ளுபடியும் அப்போது கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது. ஆனால் அதை காந்றில் பறக்க விட்டுவிட்டது.
85.86 லட்சம் விவசாயிகள்- பஞ்சாப், ஹரியா னா, இமாச்சல், சண்டிகர் விவசாயிகள் - பெற்ற கடன் சுமார் 2.20 லட்சம் கோடியை தள்ளுபடி செய்யவே கடந்த முறை கோரிக்கை எழுப்பப் பட்டது. அதைத்தான் தள்ளுபடி செய்யும் திட்ட மில்லை என்று நிதியமைச்சர் கூறியிருந்தார். ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் ராம்நாத் தாக்குர், 2019 முதல் 2024 வரை எந்த ஒரு விவசா யிகள் கடன் தள்ளுபடி திட்டமும் அறிவிக்கப்பட வில்லை என்றும் நாடு முழுவதும் கடன் பெற்ற விவசாயிகள் 18.74 கோடி என்றும் மக்களவை யில் கூறியிருந்தார்.
பயிர் வளர்க்கும் விவசாயிகள், உலக மக்க ளின் உயிர் வளர்க்கும் அன்னதாதாக்கள், விளை பொருள்களுக்கு கட்டுபடியான விலை இல்லாததாலும் இடுபொருள்களின் விலை உயர்வாலும் கடன் தொல்லையாலும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை இன்னும் தொடரவே செய்கிறது. ஆனாலும் பாஜக ஆட்சி யாளர்களின் உள்ளம்தான் இரங்கவில்லை.
பயிர் வளர்க்கும் விவசாயிகள், உலக மக்க ளின் உயிர் வளர்க்கும் அன்னதாதாக்கள், விளை பொருள்களுக்கு கட்டுபடியான விலை இல்லாததாலும் இடுபொருள்களின் விலை உயர்வாலும் கடன் தொல்லையாலும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை இன்னும் தொடரவே செய்கிறது. ஆனாலும் பாஜக ஆட்சி யாளர்களின் உள்ளம்தான் இரங்கவில்லை.
