இந்து, சீக்கிய மற்றும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பட்டியல் சாதி அந்தஸ்து!
புதுதில்லி கடந்த 2025ஆம் ஆண்டு, ஆந்திரப் பிரதே சத்தைச் சேர்ந்த சிந்தாடா ஆனந்த், தன்னைச் சிலர் சாதி ரீதியாக இழிவுபடுத்தித் தாக்கியதாகக் கூறி, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, “ஆனந்த் கிறிஸ்தவப் போதகராக இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருகிறார். எனவே, அவர் பட்டியல் சாதி அந்தஸ்தை இழந்துவிட்டார். அதன் காரணமாக, அவர் இந்தச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கத் தகுதியில்லை” என்று வாதிட்ட னர். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட ஆந்திர உயர்நீதிமன்றம், ஆனந்த் கிறிஸ்தவ மதத்தி ற்கு மாறியதால் அவர் பட்டியல் சாதிப் பிரிவைச் சேர்ந்தவர் எனக் கருத முடியாது என்றும், எனவே எப்ஐஆரை ரத்து செய்தும் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆனந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்குப் பின்,”1950ஆம் ஆண்டின் அரசிய லமைப்பு (பட்டியல் சாதியினர்) ஆணையின் பிரிவு 3, இந்து மதத்திலிருந்து வேறுபட்ட மதத்தைப் பின்பற்றும் எவரும் பட்டியல் சாதி யின் உறுப்பினராகக் கருதப்பட மாட்டார்கள் என்று கூறுகிறது. அதாவது இந்து, சீக்கிய அல்லது பௌத்த மதத்தைத் தவிர வேறு மதத்திற்கு மாறும் ஒருவர் பட்டியல் சாதி உறுப்பி னராகத் தொடர முடியாது. இந்த விதிமுறை மிகத் தெளிவானது மற்றும் மாற்ற முடியாதது. அதே போல 1950ஆம் ஆண்டின் ஆணையில் குறிப்பிடப்படாத மதங்களுக்கு மாறுவது, இட ஒதுக்கீடு அந்தஸ்தை இழக்க வழிவகுக்கும். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு பட்டியல் சாதி நபர், ‘பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி யினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின்’ கீழ் பாதுகாப்பு கோர முடியாது. நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டப்பூர்வ நன்மைகள், பாதுகாப்பு அல்லது இடஒதுக்கீடு எதனையும், பிரிவு 3-இன் கீழ் பட்டியல் சாதி உறுப்பினராகக் கருதப்படாத நபர் கோர முடி யாது. இதில் எந்த விதிவிலக்கும் கிடையாது. அதாவது ஒரு நபர் குறிப்பிட்ட மதங்களைத் தவிர்த்து, பிற மதங்களைப் பின்பற்றிக் கொண்டே, பட்டியல் சாதி உறுப்பினராக உரிமை கோர முடியாது” என்று கூறி ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
