headlines

img

இந்திய வரலாற்றின் இருளடைந்த நாட்கள்

இந்திய வரலாற்றின் இருளடைந்த நாட்கள்

பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி நாமாவளி பாட ஏதாவது ஒரு நாட்கணக்கை கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கிறார்கள் அவரது அடிப்பொடிகள். இப்போது புதிதாக ஒன்றை கண்டுபிடித்து புல்லரிக்கிறார்கள். 

பிரதமராக உள்ள நரேந்திர மோடி குஜராத் முதல்வராகவும், பின் பிரதமராகவும் பொறுப்பு வகித்து 8,931 நாட்கள் ஆகிறதாம். அதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவங்கி, பாஜக தேசிய தலைவர்  நிதின் நபின் உட்பட பாஜகவினர் பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். 

அரசின் தலைவராக அவர் 8,931 நாட்கள் ஒரு முறை கூட விடுமுறை எடுக்காமல் உழைத்தி ருக்கிறார் என்று அமித் ஷா கூறியுள்ளார். அவர் பிரதமரான பிறகு உள்நாட்டில் இருந்ததை விட தன்னுடைய கார்ப்பரேட் கூட்டாளிகளின் மூலதன மூதலீட்டிற்காக  வெளிநாடுகளுக்கு பயணம் செய்த நாட்கள் அதிகம். இவை விடு முறை கணக்கில் வருமா என்று தெரியவில்லை.

இவர் குஜராத் மாநில முதல்வராக இருந்த போதுதான் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் நர வேட்டையாடப்பட்டார்கள். அப்போதைய பிரத மர் வாஜ்பாய் நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டிற்கு செல்வேன் என்று  சொல்லும் அளவுக்கு நிலைமை இருந்தது. இன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், பிரதமர் மோடியும் நெருங்கிய நண்பர் கள் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் குஜ ராத் வன்முறையைத் தொடர்ந்து அப்போது மோடி அமெரிக்கா வர விசா வழங்க மறுத்தது.

குஜராத் மாடல் என்று கட்டமைக்கப்பட்ட போலியான பிம்பத்தையே மக்களவை தேர்த லுக்கான முதலீடு ஆக்கினார்கள். ஆனால் அந்த குஜராத் மாடல் என்பது போலியானது; புனைந்துரைக்கப்பட்டது என்பது அன்றைக்கே  அம்பலமாகிவிட்டது. குஜராத்தை விட பல்வேறு துறைகளில் கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பல படிகள் முன்னேறியுள்ளன.

பிரதமராக வந்தபிறகு நரேந்திர மோடி மக்க ளுக்கு அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவைவிட இரு மடங்கு விலை, ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்பதெல்லாம் வெறும் வார்த் தைகளாகவே தேங்கி நிற்கிறது. இவரால் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு, கருப்புப் பண ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் படு தோல்வி அடைந்துவிட்டன. 

மறுபுறத்தில் இந்தியாவின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் கூட்டாட்சி போன்ற அரசியல் சட்ட விழுமியங்களின் மீது தாக்குதல் தொடுத்து வரு வதுதான் அரசுத் தலைவர் என்கிற முறையில் இவரது சாதனை. அயல்துறைக் கொள்கை, உள்துறைக் கொள்கை என அனைத்திலும் இந்தியாவை பின் னுக்குத் தள்ளியதுதான் மோடி ஆட்சியின் சாதனை. அரசுத் தலைவர் என்கிற முறையில் இவரது ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்றே வரலாறு பதிவு செய்யும்.