tamilnadu

img

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை

மக்களவை இடங்கள்  816 ஆக உயருகிறதா? 2023ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை (மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்க ளில் பெண்களுக்கு 3இல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு), மக்கள் தொகை கணக்கெ டுப்பு, தொகுதி மறு வரையறை ஆகிய நடைமுறைகளோடு இணைக்காமல் தனியாகப் பிரித்து அமல்படுத்துவது குறித்து ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது. அதன்படி, வரவிருக்கும் 2029 மக்களவைத் தேர்தலுக்குள் புதிய மாற்றங்களைக் கொண்டுவரத் திட்ட மிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  இதனால் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை 543லிருந்து (மக்களவை) 816ஆக உயரும். குறிப்பாக மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு 273 இடங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மக்கள் தொகை மூலம் இந்த தொகுதி வரையறை மேற்கொள் ளப்பட்டால் தமிழ்நாட்டில் மக்களவை தொ குதிகளின் எண்ணிக்கை 39லிருந்து 59ஆக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.