ஜார்க்கண்டில் கன்வார் யாத்திரை சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் காலை 4.30 மணிக்கு ஜமுனியா வனப்பகுதிக்கு அருகே கன்வார் யாத்திரை சென்ற பேருந்து சிலிண்டர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பக்தர்கள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
நடந்த விபத்தில் பேருந்தில் இருந்த 35 பேர் சிக்கியிருந்ததாகவும் . படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தொகுதியின் பாஜக. எம்.பி நிஷிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும்18 உயிரிழந்ததையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.