10 ஆண்டுகளில் 3.09 லட்சம் அரசு வேலைகள் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு வரலாற்று சாதனை
திருவனந்தபுரம் கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) ஆட்சி நடைபெற்று வருகிறது. முத லமைச்சராக பினராயி விஜயன் உள்ளார். இந்நிலையில், அரசு பணி நிய மனங்களில் கேரளம் வரலாற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. 10 ஆண்டுகளில், கேரள பிஎஸ்சி (அரசு பணியாளர் தேர்வாணை யம்) மூலம் 3,09,922 பேர் நியமனத் திற்கு பரிந்துரைக்கப்பட்டு அரசு வேலைகளைப் பெற்றனர். இது வேறு எந்த மாநிலமும் உரிமை கோர முடியாத அரிய சாதனையா கும். மற்ற இடங்களில், பிஎஸ்சி- யை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, பணம் வசூலித்து, தற்காலிக நிய மனங்களைச் செய்வதன் மூலம் கேரளம் தற்காலிக மற்றும் ஒப்பந்த நியமனங்களைச் செய்து வரு கிறது. அத்தியாவசியத் துறை களில் புதிய பதவிகளை உரு வாக்க, காலியிடங்களைத் துல்லிய மாகப் தெரிவிக்க மற்றும் செயல் முறையை முழுமையாக ஆன் லைனில் மாற்றுவதன் மூலமும் இந்த சாதனை சாத்தியமானது. முந்தைய ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப் - காங்கிரஸ் கூட்டணி) ஆட்சிக் காலத்தில் நிய மனங்கள் செய்யப்படாத பல பதவி களில் தொழில்நுட்ப மற்றும் சட்டத் தடைகளுக்கு தீர்வு காணப்பட்டன. தரவரிசைப் பட்டியல்கள் இல்லாத சூழ்நிலை நீக்கப்பட்டு, பதவிக் காலம் முடிந்த மறுநாளே புதிய தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. முதல் (2016-2021) பினராயி அரசு 1,61,268 பேருக்கு நியமனப் பரிந்துரைகளை அனுப்பியது, இரண்டாவது பினராயி அரசு (2021-2026) இதுவரை 1,48,654 பேருக்கு நியமனப் பரிந்துரை களை பிஎஸ்சி மூலம் அனுப்பியுள் ளது. கடந்த ஆண்டு மட்டும் 37,425 பேர் பல்வேறு பதவிகளுக்கு அனுப்பப்பட்டனர். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 34,000க்கும் மேற்பட்ட நியமனப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் ஒரு அரிய சாதனையாகும். 2025ஆம் ஆண்டில், 902 பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 1,130 பதவிகளுக்கான தரவரி சைப் பட்டியலும் 1,276 பதவி களுக்கான தேர்வுகளும் வெளியி டப்பட்டன. 1,405 பதவிகளுக்கான தேர்வுகளும் நடத்தப்பட்டன இடஒதுக்கீட்டில் முதலிடம் அரசு நியமனங்களில் இடஒதுக் கீட்டைப் பராமரிப்பதில் கேரள பிஎஸ்சி நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. 2024ஆம் ஆண்டில் கேரள பிஎஸ்சி மூலம் நியமனப் பரிந்துரை களைப் 2,613 பேர் பட்டியல் சாதி பிரிவைச் சேர்ந்தவர்கள், 1,524 பேர் பட்டியல் பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 11,169 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். உத்தரப்பிரதேசத்தில் நிய மனப் பரிந்துரைகளைப் பெற்ற 970 பேரில், 38 பேர் மட்டுமே பட்டி யல் பழங்குடியினரைச் சேர்ந்த வர்கள். 159 பேர் பட்டியல் சாதியின ரும், 231 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்த வர்களும் ஆவர். அவர்கள் அனை வரும் குறைந்த சம்பளத்துடன் கூடிய குரூப் சி பதவிகளில் நிய மிக்கப்பட்டனர். குரூப் ஏ பதவி களில் பட்டியல் சாதியைச் சேர்ந்த இரண்டு பேர் மட்டுமே நியமிக்கப் பட்டனர். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமி ஷன் (UPSC) தெரிவித்துள்ளபடி, நாட்டின் 50 சதவிகிதத்திற்கும் அதிக மான பிஎஸ்சி நியமனங்கள் கேரளா வில் செய்யப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டில், கேரளா உட்பட 28 மாநி லங்களில் மொத்தம் 67,711 நிய மனங்கள் பிஎஸ்சி மூலம் செய்யப் பட்டன. இவற்றில், 34,194 (51 சத விகிதம்) கேரளாவில் மட்டும் செய்யப்பட்டன. இரண்டாவது இடத்தில் தெலுங்கானா 11,874 நிய மனங்களையும், மூன்றாவது இடத்தைப் பிடித்த மகாராஷ்டிரா 3581 நியமனங்களையும் செய்துள் ளது. 24 கோடி மக்கள் தொகையைக் கொண்ட பாஜக ஆளும் உத்த ரப்பிரதேசத்தில், அம்மாநில பிஎஸ்சி மூலம் 970 நியமனங்கள் மட்டுமே செய்யப்பட்டன. கொரோனா, பெருவெள்ளம் மற்றும் ஒன்றிய அரசின் நிதித் தடை களால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளித்து, எல்டிஎப் அரசு இளை ஞர்களின் கனவுகளை நனவாக்க துணை நின்றது. பிற மாநிலங்கள் இதுபோன்ற ஆட்சேர்ப்பு வாரி யங்கள் மூலம் தற்காலிக மற்றும் ஒப்பந்த நியமனங்களைச் செய்து வருகின்றன. ஆனால் கேரளம் ஆண்டுக்கு முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர நியமனங்களைச் செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தேசாபிமானியில் எஸ்.கிரண்பாபு தமிழில் சி.முருகேசன்
