tamilnadu

img

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 28 – மதுரையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனிப்பட்ட முறையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை கிளை நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை உச்சநீதிமன்றத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.  இந்நிலையில் இது குறித்து சம்பந்தப்பட்ட நீதிபதி, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளார். இது நாடு முழுவதும் வழக்கறிஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர்களின் உரிமைகளை பறிக்கிற இந்நடவடிக்கைக்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்குரல் எழுப்பியுள்ளனர்.  இதன்ஒருபகுதியாக கோவையில் தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஜாக் அமைப்பின் தலைவர் நந்தகுமார் தலைமை ஏற்றார். இதில், கோயம்புத்தூர் பார் அசோசியேசன் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சுதீஷ், மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள சங்கத்தின் நிர்வாகிகள் என திராளோர் பங்கேற்று, எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். சேலம் இதேபோன்று, சேலம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.