tamilnadu

img

டாஸ்மாக் கடைகளில் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுத்திடுக

டாஸ்மாக் கடைகளில் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுத்திடுக

அண்ணாநகர் பகுதி மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 28- அரசு நிர்ணயித்த நேரத்திற்கு மாறாக, டாஸ்மாக் கடைகளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பதை தடுக்க வேண்டும் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் அண்ணா நகர் பகுதி மாநாடு 28வது பகுதி மாநாடு ஞாயி றன்று (ஜூலை 27) அமைந்த கரையில் நடைபெற்றது. மாநாட்டில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாண வர்கள் சாலையை கடக்க ஏதுவாக பச்சையப்பன் கல்லூரி அருகே நடை மேம்பாலம் அமைக்க  வேண்டும், 8வது மண்டலத்தில் தூய்மைப் பணியை தனியார்  மயமாககும் நடவடிக்கை யை கைவிட வேண்டும். எம்.எம்.டி.ஏ. காலனி பகுதி யில் மழை காலத்தில் வெள்ளம் தேங்குவதை தடுக்க வேண்டும், எம்.எம்.காலனி, பி.பி. காலனி மக்களுக்கு வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டிற்கு பகுதித் தலைவர் மு.பரந்தாமன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் கே.மகேந்திரவர்மன் சங்க கொடியை ஏற்றினார். பகுதிக்குழு உறுப்பினர்கள் மா.அரவிந்த் வரவேற்றார், ரா.தீபக் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் யூஜின் துவக்க உரையாற்றினார். பகுதிச் செயலாளர் ச.மணிகண்டன் வேலை அறிக்கையும், பொருளாளர் ரங்கநாதன் வரவு செலவு அறிக்கையை சமர்பித்த னர். முன்னாள் தலைவர் உதயகுமார், ஆ.பிரிய தர்ஷினி எம்.சி., ஆகி யோர் வாழ்த்தி பேசினர். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் கே. மணி கண்டன் நிறைவுரையாற்றி னார். பகுதிக்குழு உறுப்பி னர் நந்தகோபால் நன்றி கூறினார். 13 பேர் கொண்ட பகுதிக்குழுவின் தலை வராக எஸ்.மணிகண்டன், செயலாளராக கார்த்திக், பொருளாளராக தீபக் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.