states

img

வாடகைத்தாய் முறையில் மோசடி - மருத்துவர்கள் உட்பட 8 பேர் கைது!

ஹைதராபாத்தில் வாடகைத் தாய் முறையில் மோசடியில் ஈடுபட்ட 2 மருத்துவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே செங்குந்திராபாத்தில் செயல்பட்டுவந்த கருவுருதல் மையத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள வந்த தம்பதியினருக்கு வேறு ஒருவரின் குழந்தை கொடுத்து மோசடி செய்துள்ளனர்.
ஏழைக் குடும்பத்திடமிருந்து, ரூ.90,000க்கு பிறந்த குழந்தையை வாங்கி, வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தை என்று தம்பதியிடமிருந்து ரூ.35 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். இந்த வழக்கில் 2 மருத்துவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும் இந்த வழக்கில் கைதான டாக்டர் நம்ரதா என்பவர் ஏற்கனவே மீது 2 வழக்குகள் இருப்பதாகவும், அதில் ஒரு வழக்கில் வாடகைத் தாய் முறையில் பெற்ற குழந்தை, தங்களது குழந்தை இல்லை என அமெரிக்க தம்பதி தொடர்ந்த வழக்கில், ஏற்கனவே அவரது உரிமம் 5 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.