தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது.
சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை காலையில் ரூ.2,160 குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.3,200 குறைந்து ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் விலை காலை ரூ.270 குறைந்த நிலையில், மாலையில் ரூ.400 குறைந்து ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
