ஈரானிலிருந்து அர்மேனியா, அஜர்பைஜான் வழியாக வெளியேறும் இந்திய மாணவர்கள் மந்தமான மீட்புப் பணியால் கவலையில் பெற்றோர்கள்
புதுதில்லி போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அங்கு நிச்சயமற்ற சூழல் நிலவு வதால், தற்போதைய சூழ்நிலையில் இந்திய மாணவர்கள் ஈரானின் அண்டை நாடுகளான அர்மேனியா, அஜர்பைஜான் ஆகிய நாடு களின் வழியாக வெளியேறி, தில்லிக்கு வரு கின்றனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் (பெரும்பாலானோர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்) சிக்கியுள்ள சூழலில், ஒரு நாளைக்கு 200க்கும் கீழான எண்ணிக்கை யிலேயே இந்திய மாணவர்கள் நாடு திரும்பு கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 151 இந்தியர்கள் ஈரான் - அஜர்பைஜான் எல்லையைக் கடந்து நாடு திரும்பியுள்ளனர். வெளியேற்றும் பணி மந்தமாக நடப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற் றோர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். தினமும் 10 பேர் இந்திய மாணவர்களின் வருகையில் தாமதம் ஏற்படுவதற்கு அஜர்பைஜான் விதித் துள்ள கட்டுப்பாடே காரணம் ஆகும். தீவிர மான பாதுகாப்புச் சோதனைகளை நடத்து வதற்காக சுமார் 10 பேர் மட்டுமே ஒரு நாளில் எல்லையைக் கடக்க அனுமதிக்கப் படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் உடல்நிலை காஷ்மீர் பெற்றோர்களின் கூற்றுப்படி, சுமார் 250 காஷ்மீர் மாணவர்கள் அஜர்பை ஜான் எல்லையில் சிக்கியுள்ளனர். அவர் களில் பலருக்கு மார்புச் சளி தொற்று மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளி யாகியுள்ளது. இதுதொடர்பாக மாணவர் ஒருவரின் தந்தை சுஹைல் முஸாமில் காத்ரி கூறுகை யில், “பல மாணவர்களுக்குத் தேவையான மருந்துகள் கிடைக்கவில்லை. பலரிடம் பணம் இல்லை” என அவர் கூறினார். அதே போல அகில இந்திய மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் முக மது மோமின் கான் கூறுகையில், “பல மாணவர் கள் எல்லையில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் எல்லையை கடக்க அனுமதிக்கப் படவில்லை. நிச்சயமற்ற நிலை காரணமாக அவர்களின் விமான டிக்கெட்டுகள் வீணாகிப் போனதால் பலருக்கு பெரும் நிதி இழப்பு ஏற் பட்டுள்ளது” என அவர் குற்றம்சாட்டினார்.