business

img

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்துவந்த நிலையில் இன்று மீண்டும் உயரத் தொடங்கியது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று  கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ. 13,950க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,11,600க்கும் விற்பனையாகிறது.
 வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.