உனா தலித் மக்கள் மீதான தாக்குதல்: 5 பேருக்கு 5 ஆண்டு சிறை; 35 பேர் விடுதலை
வெராவல்(குஜராத்) கடந்த 2016-ஆம் ஆண்டு குஜராத்தின் உனாவில் தலித் இளைஞர்கள் மீது நடத்த ப்பட்ட கொடூரமான தாக்குதல் தொடர்பான வழக்கில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிர சோம்நாத் மாவட்டத் தின் வெராவல் கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட 41 பேரில் 5 பேருக்கு மட்டுமே 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முக்கியக் குற்றச்சாட்டுகளில் இருந்து 35 பேர் விடுவிக்கப்பட்டி ருப்பது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரி டையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நீர்த்துப்போன குற்றச்சாட்டுகளும் குறைந்தபட்ச தண்டனையும் இந்த வழக்கில் முக்கியக் குற்ற வாளிகளாகக் கருதப்பட்ட ரமேஷ் ஜாதவ், ராகேஷ் ஜோஷி, நாக்சி வாணியா, பிரமோத்கிரி கோஸ்வாமி மற்றும் பல்வந்த்கிரி கோஸ்வாமி ஆகிய ஐவருக்கு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்ட னை மற்றும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்கு தல் கொலை முயற்சி (பிரிவு 307), கடத்தல், கூட்டுச் சதி போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் வராது என்று நீதிமன்றம் நிராகரி த்துள்ளது. “பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டதாகக் கூறப்பட்ட சித்திரம் உண் மைக்கு மாறானது” என்று குறிப்பிட்ட நீதிபதி ஜிக்னேஷ் பாண்டியா, அவர்கள் காயமடைந்த தை மட்டுமே கணக்கில் கொண்டு இந்தத் தண்டனையை வழங்கியுள்ளார். 35 பேர் விடுதலை: காவல்துறை மீதான விமர்சனம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டிருந்த 4 காவல்துறை அதிகாரி கள் உட்பட 35 பேரைத் தகுந்த ஆதா ரங்கள் இல்லை எனக் கூறி நீதி மன்றம் விடுதலை செய்துள்ளது. காவல்துறை விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதையே இந்த விடுதலை காட்டுவதாகத் தலித் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. குறிப்பாக, பொதுவெளியில் அரை நிர்வாணமாக்கித் தாக்க ப்பட்ட காணொலிகள் ஆதாரமாக இருந்தும், பெரும்பா லானோர் விடுவிக்கப்பட்டிருப்பது நீதியை நீர்த்துப்போகச் செய்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட வஷ்ரம் சர்வையா தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து உடனடி விடுதலை? இந்தத் தீர்ப்பின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரும் ஏற்கெனவே விசாரணை கைதிகளாக 5 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருந்துள் ளனர். எனவே, அவர்களுக்கு விதிக் கப்பட்ட 5 ஆண்டு தண்டனைக் காலம் ஏற்கெனவே முடிந்துவிட்ட தாகக் கருதப்பட்டு, அவர்கள் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பத்தாண்டுகாலப் போராட்டத் திற்குப் பிறகு கிடைத்த இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்விதமான ஆறுதலையும் தர வில்லை. அரசு வாக்குறுதி அளித்த நிலம் மற்றும் வேலைவாய்ப்புகள் இன்னும் வழங்கப்படாத நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். லெப்ட் வியூஸ்