தூத்துக்குடி, விளாத்திகுளம் பகுதியில் மாணவி பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மார்ச் 10ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு மாணவியின் உடல் உடற்க்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டு, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சந்தேகத்திற்கிடமான 5 பேரின் டிஎன்ஏக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைதான நபர் ராமநாதபுரம், சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன்(30) எனவும் மாணவியின் விரல் நகங்களிலிருந்த சதையின் டிஎன்ஏ மாதிரியுடன் குற்றவாளியின் டிஎன்ஏ ஒத்துப்போனதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவர் கடந்த 2020-இல் எட்டயபுரத்தில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ளார் என்பதும் காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்திருந்தபோது மாணவியை கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
