அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் சலுகையில் மேலும் 5 துறை ஊழியர்களை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக தேர்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு செலுத்த இயலாத அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் உரிமை வழங்கப்படும். அதன்படி இதற்கு முன்பு காவலர்கள், தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், ராணுவ வீரர்கள், ரயில்வே பணியாளர்கள், கப்பல் பணியாளர்கள், விமான பணியாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் ஆகியோர் தபால் வாக்கு அளிக்கலாம்.
இதுதவிர மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 40% அதிகமான குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள், வீட்டில் இருந்து சிகிச்சை பெறுபவர்களும் தபால் வாக்கு அளிக்க முடியும்
அந்தவகையில் மேலும் 5 புதிய துறைகளை தேர்தல் ஆணையம் இணைத்துள்ளது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள், போக்குவரத்து காவலர்கள், சிறைத்துறை பணியாளர்கள், தீயணைப்பு துறை ஊழியர்களும் தபால் வாக்கு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
