கேரளத்தில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
கேரளத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இடதுசாரி ஜனநாயக முன்னணியை (LDF) வழிநடத்திச் செல்லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தனது வேட்பாளர் பட்டியலை கடந்த மார்ச் 15-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, சிபிஎம் 81 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 6 பேர் சுயேச்சைகள், 56 பேர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 81 பேரை வேட்பாளர்களாக சிபிஎம் நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கண்ணூரில் உள்ள தர்மடம் சட்டமன்றத் தொகுதியில் இடது ஜனநாயக முன்னணியின் (LDF) வேட்பாளராக தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
