tamilnadu

img

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு!

சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிவானந்த தாமோதர பை, கடந்த 1992இல் இந்திய வானிலை ஆய்வுத் துறையில் விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டார். கடந்த 34 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வானிலை ஆய்வுத் துறையில் பணியாற்றி வந்த இவர், இதற்கு முன்பாக தில்லியில் உள்ள புவி அறிவியல் அமைச்சகத்தின் திட்ட இயக்குநராகவும், இந்திய வானிலை துறையின் வேளாண் வானிலை ஆலோசனைப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.