tamilnadu

img

சேலம் அருகே கோர விபத்து அரசு பேருந்து மோதி 8 பேர் பலி!

அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்க இலங்கை அனுமதி மறுப்பு அனுரா அதிரடி

கொழும்பு, மார்ச் 20 - ஈரான் மீது அமெரிக்கா வும் இஸ்ரேலும் பிப்ரவரி 28 அன்று போரை துவங்கின. இந்த பின்னணியில் இந்தி யாவின் கடற்படை நிகழ்வு க்கு  விருந்தினராக வந்து திரும்பிய ஈரானின் ஐரிஸ் டெனா கடற்படை கப்பலை மார்ச் 4 அன்று இரவில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் இந்தியப் பெருங்கடலில் தாக்கி மூழ்கடித்தது.  இதனை இந்தியா வேடிக் கை பார்த்த நிலையில், ஈரான் கப்பலில் பலியானவர்களை யும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களையும் துணிச்சலாக செயல்பட்டு இலங்கை கற்படை மீட்டது.இந்நிலையில் தான், அதே மார்ச் 4 அன்று ஜிபூட்டியில் (Djibouti) இருந்து  கப்பல் அழிப்பு ஏவுகணைகளுடன் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க அனுமதி கோரி யதாகவும், அந்தக் கோரிக் கையை தாம் நிராகரித்து விட்டதாகவும் ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்க நாடாளுமன்றத்தில் தெரி வித்துள்ளார். மார்ச்  8 அன்று  அமெரிக்கா இரண்டாவது முறையாக அனுமதி கோரிய நிலையில், அப்போதும் நிராகரித்துவிட்டதாக தெரி வித்துள்ளார்.  பல அழுத்தங்கள் இருந்த போதிலும் எங்களது நடு நிலைமையைப் பேண நாங் கள் விரும்புகிறோம். நாங்கள் எதற்கும் அடிபணியமாட் டோம். மேற்கு ஆசியாவில் நடைபெறும் போரில் நடு நிலையாக இருக்க சாத்திய மான அனைத்தையும் செய்வோம்,” என்று அனுர குமார திஸா நாயக்க மிகுந்த துணிச்சலுடன் அறிவித்துள் ளார்.