மிதிவண்டி! - தரகம்பட்டி க.சண்முக சிதம்பரம்
நம்மைச் சுமக்கும் மிதிவண்டி நன்மைப் பயக்கும் மிதிவண்டி! செம்மை யாக ஓட்டுதற்குச் சீராய் உதவும் நல்வண்டி! பள்ளம் மேடு யாவிலுமே பயணம் செய்யும் மிதிவண்டி! முள்ளும் கல்லாம் வழிதனிலும் முனைப்பாய்ச் செல்லும் மிதிவண்டி! உருண்டே ஓடும் மிதிவண்டி உடலுக் குறுதி தரும்வண்டி ! உருவில் இதுவோ சிறுவண்டி உலகோர் விரும்பும் உயர்வண்டி! சுழலும் உருளி இரண்டுண்டு சோர்வை நீக்கும் நல்லுந்து! மழலை விரும்பி ஓட்டுகின்ற மகிழ்ச்சி யான மிதியுந்து ! மெல்லச் செல்லும் மிதிவண்டி! மிதிக்க ஓடும் மென்வண்டி ! இல்லம் தோறும் இருக்கின்ற இனிமை யான நல்வண்டி!
