tamilnadu

img

நெல்லையில் ஐ.டி. ஊழியர் ஆணவப்படுகொலை - எஸ்.ஐ தம்பதியின் மகன் கைது!

நெல்லையில் நேற்று கவின் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் எஸ்.ஐ தம்பதியினரின் மகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த கவின்(28) சென்னையில் ஐ.டி. ஊழியராகப் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்த கவின் தனது தாத்தாவை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டைக்கு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். நேற்று மாலை 3 மணியளவில் கவின் வீடு திரும்பும்போது நடுரோட்டில் இளைஞர் ஒருவரால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கவினின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசில் சரணடைந்த சுர்ஜித் என்ற இளைஞர், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கவின் தனது அக்காவுடன் பேசுவது பிடிக்காததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். அதன்பின் பெண்ணின் சகோதரர் சுர்ஜித்(24) மீது கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ராஜபாளையம், மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில்  உதவி ஆய்வாளர்களாக வேலை பார்க்கும் சுர்ஜித்தின் பெற்றோர்கள் பெயரும் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.