ஒன்றிய அரசின் கொள்கையால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நெருக்கடி ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., விமர்சனம்
திண்டுக்கல், ஜூலை 27 - கேரளாவைச் சேர்ந்த பொதுத் துறை நிறுவனமான - பாக்ட் - FACT (The Fertilizers and Chemicals Travancore Ltd.) கோயம் புத்தூரைச் சேர்ந்த தனியார் நிறு வனத்துடன் (Coimbatore Pioneer Fertilizers Private Limited) இணைந்து ஒற்றை சூப்பர் பாஸ்பேட் (SSP) உரங்களை சந்தைப்படுத்து வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள் ளது. இந்த ஒப்பந்தம் பொதுத்துறை நிறு வனங்களின் எதிர்காலத்திற்கு ஆபத்தான தாக அமையக்கூடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடா ளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் கவலை தெரிவித்துள்ளார். உரப்பற்றாக்குறையும் இறக்குமதி கொள்கை பிரச்சனையும் நாட்டில் உரப்பற்றாக்குறை உருவாகி யுள்ள சூழ்நிலையிலும் ஒன்றிய அரசு இறக்குமதி கொள்கையை திருத்தாமல் உள்ளது. இதனால் பொதுத்துறை நிறு வனங்களுக்கு மூலப் பொருட்கள் கிடைப்ப தில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள் ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் வெளி நாடுகளில் இருந்து மூலப்பொருட்களை எளிதாக இறக்குமதி செய்து வருகின்றன. இந்த இறக்குமதி கொள்கை பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூலப் பொருட்கள் கிடைப்பதில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தனி யார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வ தற்கு வழி வகுத்து அவர்களின் லாபத்திற்கு உதவியாக உள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான ஒப்பந்தம் பாக்ட் (FACT) நிறுவனம் தனி யார் நிறுவனத்துடன் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனியார் நிறுவனங்களின் உரங்களையும் பொதுத்துறை நிறுவனத் தின் விற்பனை நிலையங்களின் மூலம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இது பொதுத்துறை நிறுவனமான- பாக்ட் - FACT-ஐ வீழ்ச்சியை நோக்கியே கொண்டு செல்லும் என்று அஞ்சப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினரின் கவலை இதுகுறித்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வெளி யிட்டுள்ள செய்தியில், ஒன்றிய அரசின் தற்போதைய கொள்கை உற்பத்தி நெருக்கடிக்கும், தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் ஒன்றாக உள்ளது என்று விமர்சித்துள்ளார். பொதுத் துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக வீழ்ச்சியடைந்து தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.