games

விளையாட்டு

மான்செஸ்டரில் தமிழ் ; வைரலாகும் வீடியோ தமிழனாக மாறிய கே.எல்.ராகுல்

இந்தியா - இங்கிலாந்து அணி களுக்கு இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரமான மான் செஸ்டரில் நடைபெற்றது. இந்த டெஸ்ட்  போட்டியின் 4ஆவது நாளான சனிக்கிழமை அன்று, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டு இருந் தது. ஸ்டோக்ஸ் - கார்சே களத்தில் இருந்தனர். அப்போது தமிழ்நாடு வீரர் களான வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் ஆகிய இருவரும் தமிழில் உரையாடி யது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள் ளது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறு வனம் சமூக வலைத்தளங்களில் ஒளி பரப்பு செய்துள்ளது.  அதில், “சாய் சுதர்சன் : பந்து சைன்  (பிரகாசமாக) ஆகல, சைன் பண்றேன்,  ஆன ஆக மாட்டிங்குது. சுந்தர் : ஏன்?” எனக் கேட்கிறார்.  மான்செஸ்டர் மைதானத்தில் தமிழில் உரையாடும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “சுந்தர், சாய் சுதர்சன் தமிழ் பசங்க” தமிழில் உரையாடுகிறார்கள். ஆனால் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுலும்,”அப்படியே போடு வாஷ் (வாஷிங்டன் சுந்தர்)” எனக் கூறும் தமிழ் உரையாடல் வீடியோவும்  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறு வனம் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

7-0  ஆஸி., ஆதிக்கம்

3 டெஸ்ட், 5 டி-20 என இரண்டு விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளை டெஸ்ட் தொடரில், அபார வெற்றி பெற்று ஒயிட்  வாஷ் (3-0) சாதனையுடன் ஆஸ்தி ரேலியா தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து 5 போட்டி களை டி-20 தொடரில் இரு அணி களும் விளையாடி வருகின்றன. இது வரை 4 போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், 4 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 7-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி பிரம்மாண்ட முன்னிலை வகிக்கிறது. இன்னும் ஒரே ஒரு டி-20 போட்டி உள்ளது. அதிலும் வெற்றி பெற்றால் 8-0 என்ற கணக்கில் “சீரிஸ் ஒயிட் வாஷ்” கணக்கில் ஆஸ்திரேலிய அணி சாதனை வெற்றியை ருசிக்கும். 

மதுரையில் சர்ச்சை மாரத்தான் போட்டியில் தண்ணீர் கூட வழங்காத கொடூரம்

மதுரையில் ஞாயிறன்று தனி யார் யூடியூப் சேனல்களில் ஒன்றான “கட்ட எறும்பு” மாரத்தான் போட்டியை நடத்தியது. இந்த மாரத்தான் போட்டி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விமல் கலந்து கொண்டார்.  மாரத்தான் முடிந்த பின்பு நடிகர் விமல் மேடையில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது  போட்டியில் பங்கேற்றவர்கள்,”தண்ணீர் இல்லை, சான்றிதழ் தரவில்லை” என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் மேடையில் பேசிக்கொண்டு இருந்த நடிகர் விமலிடம் நேரடியாக புகார் அளித்தனர். இதனால் பேச்சை பாதி யில் நிறுத்திய நடிகர் விமல், மேடையை விட்டு கீழே இறங்கி மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களிடம் என்ன நடந்தது என விசாரணை மேற்கொண்டார். அதன்பிறகு  “கட்ட எறும்பு” யூடியூப் சேனல் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் நடிகர் விமல் எச்சரிக்கை கலந்த அறிவுரையை வழங்கினார்.  மனித உயிர் விளம்பரத்திற்கு அல்ல கட்டஎறும்பு யூடியுப் சேனல் சுய விளம்பரத்திற்காக மதுரையில் மாரத்தான் போட்டியை நடத்தி யுள்ளது. மாரத்தானில் உள்ள விதிமுறைகள் 50சதவீதம் கூட பின்பற்ற வில்லை. 5 முதல் 10 கி.மீ., வரை ஓட வேண்டிய மாரத்தான் போட்டியில் தண்ணீர் தான் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து பொருள். ஆனால் இதனை கூட வழங்க முடியாமல் மாரத் தான் நடத்த மாவட்ட நிர்வாகம் எப்படி அனுமதி வழங்கியது என்று தெரியவில்லை.