tamilnadu

img

முன்னேற்பாடுகள் இன்றியே ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டது ... சிஏஜி தகவல்

புதுதில்லி:
ஜிஎஸ்டி குறித்த முதல் சிஏஜி(Comptroller and Auditor General) அறிக்கை நாடாளுமன் றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக் கையில், ஜிஎஸ்டி சரியான முன்னேற்பாடுகள் இன்றி அமலாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.“ஜிஎஸ்டி-யின் முக்கிய அம்சங்களில் இன்வாய்ஸ்கள் இணைப்பு மிகவும் முக்கியமானதாகும். ஆனால், அதுகுறித்த விவரம் எதுவுமின்றி, ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக் குப் பின்னரே இந்த விவரம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலங்களின் வரி வருவாய் மற்றும் மத்திய வரி வருவாய் ஆகிய இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. 

ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டு இரண்டாண்டுகள் ஆகியும், செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியுடன் இன்வாய்சை ஒப்பிட எவ்வித முறையும்இல்லை; இதனால், பல இடங்களில் செலுத்தாத ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறும் முறைகேடுகள் நடந்துள்ளன.தற்போதுள்ள நிலையில், ஜிஎஸ்டி கணக்கு அளிப்பில் மேலும் பல மாறுதல்களைச் செய்யவேண்டியுள்ளது. வருமானத்துறை மற்றும் மறைமுக வரிகள் இயக்ககம் ஆகியவற்றின் இடையே போதுமான ஒருங்கிணைப்பு இல்லை. அதுமட்டுமன்றி, ஜிஎஸ்டி வரியில்மாநிலங்களுக்குத் தர வேண்டியபங்கு குறித்து, ஒரு சீரான திட்டமின்றி ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டு உள்ளது.ஒட்டுமொத்தமாக பார்த்தால், சரியான முன்னேற்பாடு மற்றும் திட்டமிடுதல் இன்றி, ஜிஎஸ்டி அமலாக்கம் நடந்திருப்பது, தெளிவாகி இருக்கிறது. இதனால், மிகவும் குறைந்த அளவே வரி வருமானம் கிடைத்துள்ளது. இந்த வரிவருவாய்க் குறைவு 10 சதவிகிதம் ஆகும்.” இவ்வாறு சிஏஜி அறிக் கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.