தேவையான முன்னேற்பாடுகள் இல்லாமல் ஜிஎஸ்டியை அமல்படுத்தியதன் மூலம் பெருமளவிலான வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து லாபமடைந்தது பெரும் கார்ப்பரேட்டுகள் மட்டுமே என்பதை இந்திய கணக்குத் தணிக்கை அறிக்கை (Comptroller and Auditor General) அண்மையில் தெளிவுபடுத்தியது.இந்நிலையில், சிஏஜி அறிக்கையின் பின்னணியில் கூடுதல் தரவுகளுடன், ஜிஎஸ்டி வரி வருவாய் ஏமாற்றத்தை அளித்து ஏன்? என்று கேரள நிதி அமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் விளக்கி
யுள்ளார். அவர், தனது முகநூல் பதிவில் தெரி வித்திருப்பதாவது:
ஜிஎஸ்டி-யிலிருந்து கேரளத்திற்கு எதிர்பார்த்ததுபோல ஏன், வருமான உயர்வு கிடைக்கவில்லை? வரி வருவாய் சுமார் 10 சதவிகிதம் அளவில்தானே அதிகரித்துள்ளது? ஏராளமானோர் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.அவர்களுக்கு நான் கூறும் பதில் “தேவையான முன்னேற்பாடுகள் இல்லாமல் ஜிஎஸ்டியை அமல்படுத்தியது” என்பதே ஆகும்.தேவையான முன்தயாரிப்புகள் இல்லாமல்- அவசரகதியில் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டுள்ளது என்று விமர்சிக்கும் சிஏஜி-யின் முக்கியமான அறிக்கையும் தற்போது வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.வரி அமைப்பில் மிகவும் முக்கியமான பகுதி வரி செலுத்துவோர் அளிக்க வேண்டியஅறிக்கைகள். ஜிஎஸ்டி ஆர்-1 (வரி செலுத்து வோரின் விற்பனை கணக்கு), ஜிஎஸ்டி ஆர்-2 வரி செலுத்துவோர் வாங்கும் கணக்கு) ஜிஎஸ்டி ஆர்-3 (வரி செலுத்த வேண்டிய கணக்கு) என மூன்று அறிக்கைகளே ஜிஎஸ்டியால் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் அதிகாரத்தின்கீழ் உள்ள ஜிஎஸ்டிஎன் நிறுவனம் இதற்கு தேவை யான கணினி போன்றவற்றைக்கூட நிறுவாததன் மூலம் இத்தகைய முழுமையான கணக்குகளை பெற முடியவில்லை. இப்போது ‘ஜிஎஸ்டி ஆர்-3 பி’ என்கிற எளிதான அறிக்கையை வரி செலுத்துவோர் சமர்ப்பிக்கிறார்கள். இதில் தெளிவான எந்த ஒரு கணக்கும் இருக்காது. மொத்தம் வாங்கியது, மொத்தம் விற்றது, வாங்கும்போது கொடுத்த வரி, விற்றபோது விதித்த வரி, விற்றபோது விதித்த
வரியிலிருந்து வாங்கும்போது கொடுத்த வரியைக்(இன்புட் டேக்ஸ் கிரெடிட்) கழித்து அரசுக்கு அளிக்க வேண்டிய அசல் வரி மீதான வரி என்பதுகுறித்த மொத்தக் கணக்கு மட்டுமே ‘3 பி’-யில் இருக்கும். இதைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பை தடுக்க
முடியாது என்பதே ஜிஎஸ்டி-யின் நிர்ணயிப்பு.
வியாபாரிகள் அளிக்கும் உள்வரவு (இன்புட்) வரியின் உண்மையான மதிப்பை ஆய்வு செய்வது இயலாத காரியம். இது சாத்தியமாக வேண்டுமென்றால் ‘ஜிஎஸ்டி ஆர்-2’வில் வாங்கல் தொடர்பான தெளிவான கணக்குகள் வேண்டும்.ஒருவர் வாங்குவது மற்றொருவரது விற்பனை யில் தெரிய வேண்டுமல்லவா. கணினியைப் பயன்படுத்தி இவ்வாறு பொருத்திப் பார்த்தால் மட்டுமே வரி ஏய்ப்பை தடுக்க முடியும். இதுவரை அப்படி ஒரு செயலே நடைபெறவில்லை. ஆண்டறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய தேதி பலமுறை நீட்டித்த தன் மூலம் வரி செலுத்துவோரின் வரியை அறுதியிட்டு நிர்ணயிக்க முடியவில்லை. இன்புட் கிரெடிட் எடுப்பதன் மூலம் முதல்இரண்டு ஆண்டுகளில் ரூ. 2 ஆயிரம் கோடியை விட அதிகம், கேரள கஜானாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது எனது மனக்கணக்கு. அதிர்ச்சி அளிக்கும் மறைமுக வரி வீழ்ச்சி மற்றொரு முக்கியமான உண்மையாக சிஏஜி சுட்டிக்காட்டுவது எளிதான ‘ஜிஎஸ்டி ஆர் -3 பி’ அறிக்கைகூட உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப் படுவதில்லை என்பதாகும். வரி செலுத்தும் 59 சதவிகிதத்தினர் மட்டுமே உரிய நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். மொத்தத்தில் அறிக்கை சமர்ப்பணம் 68 சதவிகிதம் மட்டுமாகும். மத்தியஅரசின் மறைமுக வரி வளர்ச்சி 2016-17இல் 21.33 சதவிகிதமாக இருந்தது. ஆனால், ஜிஎஸ்டி அமலானதைத் தொடர்ந்து மறைமுக வரியின் வளர்ச்சி வெறும் 5.80 சதவிகிதம் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கேரளத்தைப் பொறுத்தவரை ஜிஎஸ்டி அமல்படுத்துவதன் மூலம் வரி வருவாய் உயரும் என எதிர்பார்த்தோம். அதற்கான அடிப்படை என்னவென்றால், கேரளத்தில் விற்பனைக்கும் பயன்பாட்டுக்குமாக மாநிலத்துக்கு வெளியி லிருந்து வாங்கி கொண்டுவரும் சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் அந்தந்த மாநிலங்களில் செலுத்தப்பட்ட வரி ஐஜிஎஸ்டி (ஐவேநபசயவநன ழுடிடினள யனே ளுநசஎiஉநள கூயஒ) என்கிற வகையில் நமக்கு கிடைக்கும் என்பதாகும். ஆனால் இதுபோன்ற வெளிமாநில வணிகத்தின் வரி முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் அனைவரும் இ-பேபில் (மின்னணு செலுத்து சீட்டு) முறைக்கு வரவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெறவில்லை. கேரளத்திற்கு அனுப்பப்படும் சரக்குகளி லிருந்து பெறும் ஐஜிஎஸ்டி அந்த சரக்கு கேரளத்தில் விற்கப்படும்போது நேர்செய்து வழங்க வேண்டியது ஜிஎஸ்டி என்கிற கம்பெனியின் பொறுப்பு. இது தொடர்பான அறிக்கைகளையும் தரவுகளையும் ஜிஎஸ்டி என்கிற கம்பெனியே தயாரிக்கிறது. ஆனால், முறையான ஐஜிஎஸ்டிசெட்டில்மெண்ட் (தீர்வை) வழங்க அந்நிறு வனத்தால் இயலாமல் போனதாக சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஜிஎஸ்டி சட்ட மீறல்
ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ளபடி விநியோக இடம் (Place of Supply) கணக்கில் உட்படுத்தாமல் நிதி ஆணைய சூத்திரத்தை பயன்படுத்தி மாநிலங்களுக்கு 2017-18 இல் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்து 688 கோடி வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது. இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி சட்ட விதிகளை மீறுவதாகும். இதன் மூலம்கேரளத்திற்கு கிடைக்க வேண்டிய வரியில் ஏற்பட்டுள்ள இழப்பை மதிப்பிடலாம். இதுமட்டுமல்லாமல் இறக்குமதியிலிருந்து கிடைத்த ஜிஎஸ்டி, ஜிஎஸ்டியின் வட்டி போன்றவை மாநிலங்களுக்கு முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்பதும் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி என்கிற நிறுவனம் தயாரித்த அறிக்கை தொகுப்புகள், பதிவுகள், மென்பொருட்களில் குறைபாடுகள் உள்ளதாகவும் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய ஐஜிஎஸ்டி முறையாக கிடைப்பதில்லை. தேவையான முன் தயாரிப்புகள் இல்லாமல் ஜிஎஸ்டியை அமல்படுத்தியதன் மூலம், பெரும் அளவிலான வரி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து ஆதாயம் அடைந்தது பெரும் கார்ப்பரேட்டுகள் மட்டுமே. 30-40 சதவிகிதம் வரிச்சுமை 18 சதவிகிதத்துக்கு மாற்றியபோது நுகர்வோருக்கு ஒரு பைசாகூட விலை குறைவு கிடைக்கவில்லை. மாறாக இது அவர்களது சொந்த லாபமாக முதலீட்டை பெருக்கிக் கொள்வதற்கே வாய்ப்பாக அமைந்தது.இவ்வாறு தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.