திருவனந்தபுரம்:
கோவிட்டிலிருந்து மக்களை பாதுகாப்ப தற்கான நடவடிக்கைகளுக்கு பணமில்லா நிலைமை இல்லை என கேரள நிதி அமைச்சர்தாமஸ் ஐசக் கூறினார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அண்மையில் அரசு அனுமதித்த ரூ.1686 கோடியை இதற்காக பயன்படுத்தலாம். திங்களன்று (ஆக.3) உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளர்களின் வங்கி கணக்குகளில் இத்தொகைசென்றடையும். மாவட்ட, ஒன்றிய பஞ்சாயத்துகளுக்கும் தொகை வழங்கப்படும். திட்டம், திட்டம் அல்லா விகிதமும் பராமரிப்பு தொகையும் கோவிட் பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம். 50 படுக்கைகள் கொண்ட கோவிட் முதல்நிலை மையங்களுக்கு ரூ.25 லட்சமும், 100 படுக்கைகள் உள்ள இடங்களில் ரூ.60 லட்சமும் செலவிடலாம். திட்டத்தை குறிப்பிட்டு அனுமதி பெற்ற உடன் நிர்வாக பொறுப்பில் உள்ள அதிகாரியின் கருவூல கணக்கிற்கு தொகை வழங்கப்படும். திட்டங்களை பின்னர் மாவட்ட திட்டக் குழு முன்பு சமர்ப்பித்தால் போதும் என தாமஸ் ஐசக் கூறினார்.