இடாநகர்:
அருணாச்சலப்பிரதேசத்தின் மலைப்பகுதியில் காணாமல் போன விமானத்தில் பயணித்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூன் 3ம் தேதி அசாம் மாநிலம் ஜோர் ஹட் விமானப்படைத்தளத்திலிருந்து அருணாசல பிரதேசத்தின் மெச்சுகா நகருக்கு இந்திய விமானப்படையின் ஏ.என்-32 ரக விமானம் புறப்பட்டது.
அந்த விமானத்தில் விமானி உள்ளிட்ட 6 அதிகாரிகள், 5 வீரர்கள், 2 பொதுமக்கள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர். மலைப்பகுதியில் சுமார் 12000 அடி உயரத்தில் பறந்த போது ரேடாரில் இருந்து திடீரென விமானம் மறைந்தது.
இதைத்தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஏ.என்.32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்று இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.