கலை அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
2025-2026ஆம் கல்வியாண்டில் கடந்தாண்டை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வுக்கு அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால், கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20%, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 15% சுயநிதி கல்லூரிகளில் 10% இடங்கள் நடப்பாண்டில் உயர்த்தப்படுகின்றன