தோழர் ஆர்.ராசப்பா காலமானார்
திருவாரூர், ஜூலை 7- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சிஐடியு மண்டலச் செயலாளர் சி.ஆர். அண்ணாதுரையின் தந்தை தோழர் ஆர்.ராசப்பா காலமானார். திருவாரூர் அருகே உள்ள துறைக்குடியில் வசித்த தோழர் ஆர். ராசப்பா செவ்வாய்க்கிழமை காலமானார். தோழரின் மறைவு செய்த அறிந்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. மாலதி, தலைவர் எம்.கே.என். அனிபா ஆகியோர் நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். அன்னாரின் இறுதி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறுகிறது.