அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில் ரூ.2.07 லட்சம் பிக்பாக்கெட் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி மேட்டுப்பாளையத்தில் இன்று பிரச்சாரத்தை துவங்கினார்.
இந்த கூட்டத்தில் நெல்லித்துறை பகுதியைச் சேர்ந்த வாழைக்காய் வியாபாரியும் அதிமுக நிர்வாகியுமான ஆனந்த் என்பவரிடம் ரூ.1லட்சம் மற்றும் அபு என்பவரிடம் ரூ.2500 ரொக்க பணம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது
இது மட்டுமின்றி காவல்துறையில் உளவுத்துறை பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் ஒருவரிடமும் ரூ.4,500 பணம் பிக் பாக்கெட் அடிக்கப்பட்டது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்