tamilnadu

img

குஜராத்தில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொலை... ஆலமரத்தில் தூக்கில் தொங்கவிட்டனர்

காந்திநகர்:
குஜராத்தில் தலித் இளம் பெண்ணை கடத்திச்சென்று, கும்பலாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, பின்னர் அந்த பெண்ணைக்கொன்று தூக்கில் தொங்கவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.ஆரவல்லி மாவட்டம் சரியா என்றகிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், டிசம்பர் 31-ஆம் தேதி தனது சகோதரியுடன் மொடாசா நகருக்குச் சென்றுள்ளார். ஆனால், சகோதரி வீடு திரும்பிய நிலையில், இளம்பெண் மட்டும் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

இதுதொடர்பாக பெற்றோர், ஜனவரி 1-ஆம் தேதிகாவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். பிமல் பர்வாட்என்பவர், சிறுமியை காரில் கடத்தி சென்றதாக நேரில்பார்த்தவர்கள் கூறுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால், அலட்சியமாக நடந்து கொண்ட போலீசார், ஜனவரி 3-ம் தேதி பெண்ணின் பெற்றோரை அழைத்து, “பிமலும்உங்க பொண்ணும் கல்யாணம் செய்துகொண்டிருப்பார்கள்.. சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிடுவார்கள்” என்று கூறியுள்ளனர்.இந்நிலையில்தான், ஜனவரி 5-ஆம் தேதி கிராமத்தில் உள்ள ஒரு ஆலமரத்தில், காணாமல் போன தலித் இளம்பெண்ணின் உடல் தூக்கில் பிணமாகத் தொங்குவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகும் குற்றவாளிகளை, போலீசார் கைது செய்யவில்லை, காவல்துறை ஆய்வாளர் ரபாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகமதாபாத் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்ட பிறகே, பிமல் பர்வாட் என்பவரைக் கைது செய்துள்ளனர். மேலும், தர்ஷன் பர்வாட்,சதீஷ் பர்வாட், ஜிகார் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.