சீர்காழி, நவ.20- நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளி டம் வேளாண் உதவி இயக்குநர் அலு வலகம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர் கட்டிடத்திற்கும் பக்கத்தில் உள்ளது. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் செல்லும் வாயில் கேட் திறக்கப்பட் டுள்ள நிலையில், வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்துக்குச் செல்லும் நுழைவாயில் கேட் மட்டும் பூட்டியே கிடக்கிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நுழை வாயில் கேட் கடந்த மூன்று வருடங்க ளாகப் பூட்டப்பட்டுள்ளது. இதனால் வேளாண் உதவி இயக்குநர் அலுவல கத்துக்கு தினந்தோறும் செல்லும் விவசாயிகள் அவதியடைகின்றனர். கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளைச் சேர்ந்த 200 கிராமங்க ளின் விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. அரசால் விவசாயிகளுக்கு வழங்கும் மானி யங்களைப் பெறுவதற்கு அடிக்கடி விவ சாயிகள் வேளாண் உதவி இயக்குநர் அலு வலகத்துக்கு வந்து செல்கின்றனர். உரங்கள், விதைகள், விதை நுண் ணூட்டங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பெறுவதற்கும் விவ சாயிகள், அங்குள்ள குடோனுக்கு எளிதில் வந்து செல்ல முடியவில்லை. மேலும் விவசாயக் குடோனுக்கு அரசால் அனுப்பி வைக்கப்படும் உரம் மற்றும் விதை மூட்டைகளை லாரிகளில் ஏற்றி வந்து குடோனுக்குள் எடுத்துச் செல்ல சிரமம் அடைகின்றனர். அரசுக்குச் சொந்தமான அலுவலகத்துக்குச் செல்லும் நுழைவாயில் கேட்டை திறக்க அரசு அதிகாரிகளே நடவ டிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவல கத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும் மூடியே கிடக்கும் கேட்டை திறக்க நட வடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து விவசாயிகள் சங்க சீர்காழி தாலுகா துணை செயலாளர் பாக்யராஜ் கூறுகை யில், வேளாண் உதவி இயக்குநர் அலு வலகத்துக்கு விவசாயிகள் சென்று வரும் நுழைவாயில் கேட் மூன்று வருட மாக மூடப்பட்டுள்ளது. இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் திறக்க வில்லை. ஒரு வாரத்துக்குள் மூடிக்கிடக் கும் கேட்டை திறக்கவில்லை என்றால் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு நூற்றுக்கணக்கான விவசா யிகளுடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.