tamilnadu

img

ஜிஎஸ்டி வசூல் உயர்வு

ஏப்ரல் மாதத்தில் ரூ.1,13,865 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் சராசரி ஜிஎஸ்டி வசூலான ரூ.98,114 கோடியைவிட இது 16 சதவீதம் அதிகம் என்பதுடன், 2017இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒரு மாதத்தில் வசூலான மிக அதிகத் தொகையும் இதுதான். இந்தத் தொகை மார்ச் மாத பரிவர்த்தனைகளுக்கானது என்பதால் அடுத்த ஆண்டும் இதே ஏப்ரல் மாதத்தில் ரூ.1,03,459 கோடி ஜிஎஸ்டி வசூலானது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், ஜிஎஸ்டி வசூல் அளவு நிலையான அளவை எட்டியிருப்பதாக அரசு நம்புகிறது. அதனால், கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வசூல் இலக்கை எட்டாததால் ஏற்பட்டநிதி நெருக்கடி இவ்வாண்டு இருக்காது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.