போத்தனூர் – பொள்ளாச்சி வழித்தடத்திலும், பொள்ளாச்சி – பாலக்காடு இடையேயும் வரும் 10 ஆம் தேதி முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவையில் இருந்து போத்தனூர், பொள்ளாச்சி வழியாக பழையபடி ரயில்சேவை துவங்கப்படுகிறது. 17 மாதங்களுக்கும் மேலாக ரயில்கள் இயக்கப்படவில்லை என்ற நிலையில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்குப் பின் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகிறது. வரும் 10 ஆம் தேதிமுதல் தினமும் மதியம், 2:10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை ஸ்டேஷன்கள் வழியாக மாலை, 4:40 மணிக்கு பழநி வருகிறது. பழநியிலிருந்து 11 ஆம் தேதிமுதல் காலை 11:15க்கு, புறப்படும் ரயில் மதியம் 2 மணிக்கு கோவை அடைகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.