கோவை, ஏப். 18-கோவையில் வாக்களிக்க வந்த மூதாட்டி வாக்குச் சாவடியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.கோவை ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்தவர் அய்யம்மாள். 85 வயதான இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில்வாக்களிக்க சென்றார். வாக்குசாவடியின் உள்ளே சென்றவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் உயிரழந்ததுதெரிய வந்தது. இச்சம்பவம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போத்தனூர் காவல்துறையினர்மூதாட்டி உயிரழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கணபதி மாநகர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வாக்கு அளிக்க சென்றபோது வாக்குசாவடியின் உள்ளேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.