tamilnadu

img

ஜனநாயக விரோத சக்திகளை இத்தேர்தலில் அகற்ற வேண்டும்

தஞ்சாவூர், ஏப். 17-தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானாய்எல்லாம் மாறும் என்பது பழையபொய்யடா” என்று பாடிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 90-ஆவது பிறந்த நாள்மற்றும் 40-ஆவது கலை இலக்கியஇரவு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பட்டுக் கோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமுஎகச கிளைத்தலைவர் முருக.சரவணன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை வரவேற் றார். மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார் கலை இரவைத் தொடங்கி வைத்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் களப்பிரன் வாழ்த்திப் பேசினார்.பா.சாதனா, பி.சாய் மானஷா, ஜெ.ஹர்ஷினி ஆகியோரின் வரவேற்பு பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மண் மணக்கும் பாடல்களை புதுக் கோட்டை சுகந்தி பாடினார். தமிழர் வாகைக்களம் க.செந்தமிழ்ச்செல்வன், மா.முரளிதரன் ஆகியோரின் சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. “நல்லோரை எல்லோரும் கொண்டாடும்” என்ற தலைப்பில் தமுஎகசமாநிலத் துணைத் தலைவர்கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் உரை நிகழ்த்தினார். 40 ஆண்டுகளாகவிழா செழிக்க உழைத்த தோழர்களுக்கு மரியாதை செய்து தமுஎகசமாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உரை நிகழ்த்தினார். நிகழ்வுக்கு முன்னாள் மாவட்டத் தலைவர் தி.தனபால் தலைமை வகித்தார். 


கவிஞர் வல்லம் தாஜூபால் ‘தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்’ என்ற தலைப் பில் கவி பாடினார். சென்னை மாற்றுஊடக மையம் பேராசிரியர் இரா.காளீஸ்வரன் குழுவினரின் பறையாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கவிஞர் இனியன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர் மருத்துவர் ச.வீரமணி,கவிஞர் ஆம்பல் காமராஜ், கவிஞர் பெரமநாதன், கவிஞர் நாகராஜ் ஆகியோர் கவிதை வாசித்தனர். தமிழாசிரியர் தமிழவன், என்.கந்தசாமி, ஊரணிபுரம் தங்கராஜ் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.முன்னதாக மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி அண்மையில் மறைந்த பட்டுக்கோட்டையாரின் துணைவியார் கவுராம்பாளுக்கு அஞ்சலி செலுத்தி பேசினார். அவர்பேசுகையில், “கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என மாவோசொல்லி இருக்கிறார். கலையை முழுமையாக, மக்களுக்காக அதுவும் அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பயன்படுத்திய பட்டுக் கோட்டையார் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பார். அந்த அளவுக்கு இந்த ஆட்சிகளில் கருத்துச் சுதந்திரம் என்பது இல்லாமல் உள்ளது. அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டம்தேசத்தில் எவரையும் ஜாதியின்பெயராலோ மதத்தின் பெயராலோ ஒடுக்க கூடாது, நசுக்கக் கூடாது என்று சொல்கிறது. ஆனால் இன்றைக்கு அப்படி நடந்து கொண்டிருக்கிறதா. குறிப்பாக இன்றைய மத்திய ஆட்சியில். வளர்ச்சி என்றபெயரில், ஆட்சிக்கு வந்த மத்தியஅரசு இன்றைக்கு என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பதை நாம் கண் கூடாகக் காண்கிறோம். டெல்டா மண்டலம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்திற்கு தாரை வார்க்கப்படுகிறது. அணுஉலை, நியூட்ரினோ என மக்களுக்கு ஆபத்தான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது.இது தான் நாம் காணக் கூடியவளர்ச்சி. இதை மக்கள் உணர்ந்துகொண்டு, அவர்களை புறக்கணிக்கும் நிலை வந்து விட்டதால், தேசபக்தி என்ற பெயரில் ராணுவ வீரர்களைப் பலி கொடுத்து புதிய கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றனர். 


மத்திய அரசு இன்றைக்கு சவ்கிதார் என்கின்றனர். நாட்டை காப்போம் என்கின்றனர். நமது ஜனநாயக உரிமைகளை, கலாச்சாரம், பண்பாடு, அனைத்தையும் இழந்து விட்டு அவர்கள் தூக்கிப்பிடிக்கும் சனாதனத்தை காவல்காக்கும் நாய்களாக நம்மை மாற்ற முயற்சிக்கின்றனர். மத்திய அரசு, அவற்றைத் தாங்கிப் பிடிக்கும் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் தங்களை இந்துக்களின் காவலர்கள் என சொல்லிக்கொள்கின்றனர். அது உண்மையா.இந்துத்துவா என்பது சமத்துவம் இல்லாதது. சாதியின் பெயரால் படிநிலைகளை வைத் துள்ளனர். சமத்துவம் கிடையாது. கருவறைக்குள் அனைத்துஇந்துக்களையும் அனுமதிப்பார் களா. இந்துக்கள் என்று சொல்லி நம்மை திசை திருப்புவார்கள். நாம்இந்துக்கள் அல்ல. இந்துக்கள் ஆக்கப்பட்டவர்கள். நாட்டார் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, முன்னோர்களை வழிபட்டு வந்தவர்கள். சமஸ்கிருதத்தை திணித்தவர்கள்நம்மை இந்துக்களாக மாற்ற முயற்சிக்கின்றனர். நாம் இந்துக்களாக மாற்றப்பட்ட வரலாறை புரிந்து கொள்ள வேண்டும். நடிகைகளின் திருமண வரவேற்பில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆடைகளை அணிந்து கொண்டு, விமானப் பயணத்திலேயே திரியக் கூடிய பிரதமர், கஜா புயலில் பாதிக்கப்பட்ட போது நம்மை வந்து பார்த்தாரா. இந்து என்ற பெயரில் நம்மை மயக்கப் பார்ப்பார்கள். யாரும் ஏமாந்து விட வேண்டாம். சாதியின்பெயராலும், மதத்தின் பெயராலும் இவர்கள் நம்மை ஒடுக்கி வைத்தவர்கள். சனாதானத்தின் பெயரால் நம்மை ஒதுக்கி வைக்கும்இந்த திண்ணைப் பேச்சு வீரர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 


இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணி மண்டபத்தில்கவிஞர் சிலைக்கு கிளை துணைச்செயலாளர் பி.கிருஸ்துதாஸ் தலைமையில் சசிகலா சுந்தரபாண்டியன்மாலை அணிவித்தார். மாலையில்கிளை துணை தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாவட்டத்தலைவர் கவிஞர் ச.ஜீவபாரதி,கவிஞர்களின் உருவப்படங்களைஎடுத்துச் செல்லும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சமூக நீதி போராளிகள் சிலைகள் உருவப் படங்களுக்கு மாலைஅணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம், சட்டமேதை அம்பேத்கர், அறிவுத் தந்தை பெரியார், மகாகவிபாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி ஆகிய சமூக நீதிப் போராளிகள்சிலைகள், உருவப் படங்களுக்கு து.அபெக்ஸ்சுரேஷ், க.செந்தில், சு.வெற்றிச்செல்வன், பாக்யாபாலா, க.கேசவன், மா.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தனர். நிறைவாககிளைப் பொருளாளர் கா.பக்கிரி சாமி நன்றிகூறினார். கலை இரவு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.