court

img

தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்!

புதுதில்லி,மே.09- தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரள ஆகிய மாநிலங்களில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக்கோரி பாஜக பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார் 
இந்த மனு மீதான விசாரணையில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது எனவும், தேசிய கல்விக்கொள்கையைச் செயல்படுத்தாதது, மாநில அரசு மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல எனவும் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசின் கொள்கையால், தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்னால் எளிதாக ஹிந்தி படிக்க முடியவில்லை. எனக் கூறிய பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணிக்கு “இப்போது டெல்லியில்தானே இருக்கிறீர்கள் உங்களுக்கு வேண்டுமென்றால் ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள் என உச்ச நீதிமன்றம் பதிலளித்துள்ளது.