திருச்சியில் புதிய பேருந்து முனையம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள பஞ்சப்பூரில் ரூ.408 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விமான நிலையத்துக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தில் இருந்து பேருந்து சேவைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.