tamilnadu

திருப்பூரில் நோய் பரப்பும் குப்பை, கழிவுநீரை உடனடியாக அகற்ற மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், செப். 3 – திருப்பூர் மாநகரில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து நோய் பரப்பும் நிலை  ஏற்பட்டிருப்பதால் உடனடியாக அதை அகற்றவும், குப்பை சேக ரிக்கும் தொட்டிகளில் உருவாகும் கழிவுநீரை அகற்றவும் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர்  மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் வியாழனன்று விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது, கடந்த இரு தினங்களாக திருப்பூர் மாநகரம் உள்பட சுற்று வட்டாரங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக சாலைகளில் ஆங் காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. முறையான வடிகால் வசதிகள் இல்லாமல் இவ்வாறு தேங்கியிருக் கும் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து நோய் உற்பத்தி மையங் களாக மாறி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப் பாக அவிநாசி முதல் அவிநாசி பாளையம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை திருப்பூர் நகரின் மையப் பகுதியில் செல்லக்கூடிய நிலையில், இந்த சாலையிலும் பல  இடங்களில் மழைநீர் தேங்கி நிற் கிறது. இது சுகாதாரச் சீர்கேடான நிலையை ஏற்படுத்துவதுடன், வாகனப் பயணம் மேற்கொள் வோருக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது. எனவே திருப்பூர் மாந கராட்சி நிர்வாகம் நோய் உரு வாக்கும் இந்த விசயத்தில், உடனடி யாக கழிவுநீரை அகற்றி சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்க வேண் டும். அதேபோல் மாநகரில் வைக்கப் பட்டுள்ள குப்பை சேகரிக்கும் தொட் டிகளில் குப்பையுடன் கழிவுநீரும் தேங்கி ஆங்காங்கே துர்நாற்றம் வீசி  வருகிறது. குப்பை அகற்றும் லாரி களில் திடக்கழிவுகள் அள்ளிச் செல் லப்பட்ட பின்னர் அத்தொட்டிகள் இருக்கும் பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நோய் உருவாக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த   குப்பை சேக ரிக்கும் தொட்டிகளை முறையாகப் பராமரிக்கவும், கழிவுநீர் தேங்கு வதைத் தடுக்கவும், அவற்றை சுத்தம்  செய்யவும் உரிய ஏற்பாடுகளை மாந கராட்சி நிர்வாகம் செய்ய வேண் டும். தினசரி மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி பணி காரணமாக திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் செயல்பட்டு வந்த தினசரி மார்க்கெட் தற்போது பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் வளா கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆரம் பத்திலேயே இப்பகுதி வியாபாரி கள் இடம் மாற்றும்போது உரிய  அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்ட னர். பல கட்டப் போராட்டங்கள், தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகே அங்கு அவர்கள் இடம்  மாறினர். அவர்களது போராட்டம் நியாயமானது என்பதை உணர்த் தக்கூடிய முறையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக காட் டன் மார்க்கெட் வளாகத்தில் செயல் பட்ட சந்தை நீரிழ் மூழ்கும் நிலை  ஏற்பட்டு வியாபாரிகள் பாதிப்பைச்  சந்தித்திருக்கின்றனர். எனவே மாந கராட்சி நிர்வாகம் அங்கு செயல் படும் தினசரி மார்க்கெட்டுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக நிறை வேற்றித் தர வேண்டும். மழைநீர் வடிகால், காய்கறிகள், பொருட் களைப் பாதுகாப்பாக இருப்பு வைப் பதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. தற்காலிகப் பேருந்து நிலையங்கள் ஸ்மார்ட் சிட்டி பணி காரண மாக பழைய பேருந்து நிலையம் மூடப்பட்ட நிலையில், புறநகர் மற்றும் வெளியூர் பேருந்துகள் தற் காலிகப் பேருந்து நிறுத்தங்களில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

ஆனால் அந்த தற் காலிக நிறுத்தங்களில் காத்திருக்கும்  பயணிகளுக்கு உரிய இருக்கை, நிழற்குடை, குடிநீர் மற்றும் கழிப் பிட வசதி எதுவும் இல்லை. பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டு நர்கள், நடத்துநர்களுக்கும் உரிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே அனைத்து தற்காலிகப் பேருந்து நிறுத்தங்களிலும் இந்த  வசதிகளை உடனடியாகச் செய்து தர வேண்டும். மேலும் அனைத்து  தற்காலிகப் பேருந்து நிறுத்தங்களுக் கும் பொது மக்கள், பயணிகள் சிரம மின்றி வந்து செல்லும் வகையில் இணைப்புப் பேருந்துகள் இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.