புதுதில்லி,மே.09- ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகள் பற்றிய நேரடி ஒளிபரப்பு மற்றும் தவிர்க்கவும். இது ராணுவ முயற்சிகளைக் குலைத்து உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.
கார்கில் போர், 26/11 தாக்குதல், காந்தஹார் விமான கடத்தல் சம்பவங்கள் இதன் ஆபத்தை நிரூபித்துள்ளன. கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்குகள் (திருத்தம்) விதிகள், 2021 இன் பிரிவு 6(1)(p) இன் படி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விளக்கங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அனைத்து ஊடகங்கள் மற்றும் தனிநபர்கள் பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.