tamilnadu

img

மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி!

மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி!

சென்னை, ஜூலை 5- மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத் தூர் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935- ஆம் ஆண்டு பிறந்த வா.மு.சேது ராமன், சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம்  பெற்றார். நெஞ்சத் தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், தாய்மண், சேது காப்பியம் உட்பட ஏராளமான நூல் களை எழுதியுள்ளார். ஒரு  லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளைப் பதிப்பித்த வர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனராக இருந்தவர். இவருக்கு பெருங்கவிக்கோ, செந் தமிழ்க் கவிமணி போன்ற  பட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன. திருவள்ளுவர் விருது, கலைமாமணி விருது, சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட பல்வேறு  விருதுகளையும் பெற்றுள்ளார். மறைந்த வா.மு. சேதுராமன் இறுதிச்சடங்கு  சனிக்கிழமை (ஜூலை 5) சென்னை விரு கம்பாக்கத்தில் நடைபெற்றது.  முன்னதாக, பொது மக்களின் அஞ்சலிக் காக சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகரில் உள்ள பெருங்கவிக்கோ தமிழ்க்கோட் டம் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வா.மு. சேதுராமன் உடலுக்கு முதல்வர் மு.க.  ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வேல்முருகன் எம்எல்ஏ, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த வா.மு.  சேதுராமனுக்கு, வா.மு.சே. திருவள்ளுவர், வா.மு.சே. கவியரசன், வா.மு.சே. ஆண்ட வர், வா.மு.சே. தமிழ் மணிகண்டன் ஆகிய மகன்களும், வா.மு.சே. பூங்கொடி என்ற மகளும் உள்ளனர்.

சிபிஎம் தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி

மூத்த தமிழறிஞர், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், வெள்ளிக்கிழமையன்று காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  கே. பாலகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் உள்ளிட்டோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.